நாட்டின் ஒரு சில பகுதிகளில் மாத்திரம் மழைக்கு வாய்ப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
நாட்டின் ஒரு சில பகுதிகளில் மாத்திரம் மழைக்கு வாய்ப்பு!

வடமாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என்றும் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும். 

ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.  

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது  மணிக்கு 30-40 கி.மீற்றர் வேகத்தில் காற்றானது வீசக்கூடும் எனவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது. 

இடியுடன் கூடிய மழை தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் அன்புடன் கேட்டுக்கொள்கின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4