இலங்கையின் அடிப்படை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் : ஐ.நா அறிக்கையில் தெரிவிப்பு!

#Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
2 months ago
இலங்கையின் அடிப்படை சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் : ஐ.நா அறிக்கையில் தெரிவிப்பு!

இலங்கையின் அடிப்படை சுதந்திரத்திற்கு மேலும் அச்சுறுத்தல்கள் உள்ளதாக ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகரால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐநா அறிக்கையை மேற்கோள் காட்டி மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

குறித்த அறிக்கையில், 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் இலங்கையில் வறுமை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐக்கிய நாடுகள் சபையின் புள்ளிவிபரங்களின் பிரகாரம் இலங்கையில் மூன்றில் ஒரு பகுதியினர் உணவு பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் மனித உரிமைகள் நிலைமையை ஆராய்வதற்கும் சாட்சியங்களை சேகரிப்பதற்கும் பல்வேறு முறைகளின் ஊடாக ஏற்பட்டுள்ள தடைகளை ஆராய்ந்து சர்வதேச சமூகத்தின் தலையீட்டிற்கான தற்போதைய பிரேரணையை புதுப்பிக்குமாறு மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் தனது அறிக்கையில் சபையின் உறுப்பு நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் அமர்வில், தற்போதுள்ள தீர்மானத்தை புதுப்பிப்பதற்கு மேலதிகமாக இலங்கை தொடர்பில் புதிய தீர்மானம் கொண்டுவரப்பட வேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!