ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஒரேநாளில் 60இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
2 months ago
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஒரேநாளில் 60இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு!

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 62 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து இது தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

அந்த முறைப்பாடுகளில் அதிகளவான முறைப்பாடுகள் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பிலானவை எனவும், பாரதூரமான சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் தேர்தல் முறைப்பாடுகளை பெற்றுக் கொள்வதற்காக விசேட பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸ் தலைமையகத்தில் உள்ள விசேட தேர்தல் காரியாலயத்தில் அந்த பிரிவுகளுக்கு கிடைக்கும் முறைப்பாடுகளை தினந்தோறும் மீளாய்வு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இதுவரை கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

ஜனாதிபதி வேட்பாளர்களின் பாதுகாப்பு மற்றும் பொது பேரணிகளின் பாதுகாப்புக்காக பொலிஸ் ஏற்கனவே முறையான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. 

இதற்கிடையில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, உள்ளாட்சி அமைப்புகள் வாக்குப்பதிவு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்  சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!