எம்.பிக்களுக்கு நேரடியாக பணம் கிடைக்காது! சுமந்திரன் பதிலடி

#SriLanka #M. A. Sumanthiran
Mayoorikka
1 year ago
எம்.பிக்களுக்கு நேரடியாக பணம் கிடைக்காது!  சுமந்திரன் பதிலடி

அபிவிருத்தி பணம் ஜனாதிபதி செயலகத்தால் நேரடியாக மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பப்படுகின்றதே தவிர எந்த பாராளுமன்ற உறுப்பிருக்கும் நேரடியாக கொடுக்கப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

 தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வெளியிட்ட ஊடக அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தமிழ் தேசிய கூட்டமைப்பு (இலங்கை தமிழ் அரசுக் கட்சி) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளதாக பெரியளவிலான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 இந்நிதியானது குறிப்பிடப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்டது போன்ற தோற்றப்பாடு வேண்டுமென்றே ஏற்படுத்தப்படுகின்றது. பன்முகப்படுத்தப்பட்ட அபிவிருத்தி நிதி, மற்றும் பல்வேறு அபிவிருத்தி நிதிகள் ஜனாதிபதி செயலாகத்தால் இவ்வருடம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது. இதற்கு உதவியாக அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களால் அபிவிருத்திக்காக முன்மொழிவுகள் கோரப்பட்டிருந்தன.

 இக்கோரிக்கைகளின் அடிப்படையில் வெவ்வேறு தொகைகள் ஜனாதிபதி செயலாகத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 இப்பணங்கள் மேற்சொன்ன அபிவிருத்தி பணிகளுக்காக நேரடியாக மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பப்படுகின்றதே தவிர எந்த பாராளுமன்ற உறுப்பிருக்கும் நேரடியாக கொடுக்கப்படவில்லை.

 அண்மைக்காலங்களில் மேற்கொள்ளப்படுகின்ற தவறான விஷமப்பிரசாரங்கள் காரணமாக இவ்வறிக்கை வெளியிடப்படுகின்றது என்றுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4