தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவு; திருகோணமலையில் பரப்புரை நடவடிக்கைகள் தீவிரம்!
தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பின் ஏற்பாட்டில் சானதிபதி தேர்தல் 2024 இல் தமிழ்ப் பொதுவேட்பாளராக களமிறங்கியுள்ள பா.அரியநேத்திரனுக்கு ஆதரவு திரட்டும் வகையில் திருகோணமலை மாவட்டத்தில் பரப்புரை நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவு செயற்பாடுகளை ஒருங்கிணைத்து செயற்படுத்தும்வகையில் மாவட்ட அலுவலகம் நேற்று (28) புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்திற்கான தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கான தேர்தல் பரப்புரை அலுவலகம் 103ஏ, கடல்முக வீதி, திருகோமலையில் திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது முன்னாள் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணி, முன்னாள் அதிபரும் திருகோணமலை பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவர் சி.நவரெட்ணம், தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பு உறுப்பினர் அரசியல் ஆய்வாளர் யதீந்திரா, நகரசபை முன்னாள் உப தலைவர் சே. ஸ்ரீஸ்கந்தராசா, க. திருச்செல்வம், திரு. சூ. யேசுதாசன், ஆர்.ஜெரோம், க.ஜெயப்பிரகாஸ், ஜீவரூபன், கைலவாசன், குலேந்திரன், கணேஸ், பிரேமரதன், கார்திகயன், கஜன், சிவநாதன் என அரசியல் செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் மற்றும் தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
பல்லாண்டு காலமாக தமிழ் தேசிய நிலத்தில் நடந்த இன வன்முறையில் தமது இன்னுயிர்களை தியகம் மற்றும் இழந்தவர்களுக்கு இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டு ஆரம்பமான நிகழ்வில் தமிழ்ப் பொதுவேட்பாளர் தொடர்பான கருத்துப்பரிமாற்றங்கள் மற்றும் கலந்துரையாடல் நடைபெற்றன.
இதன்போது தகபால் மூல வாக்களிப்பை இலக்காக கொண்டு தமிழ்ப் பொதுவேட்பாளரின் சங்கு சின்னத்திற்கு ஆதரவாக பிரசார நடவடிக்கைகளை இன்று (29)வியாழக்கிழமை காலை 08.30 மணி முதல் முன்னெடுப்பது எனவும் ஊரகமட்டத்து சங்கங்களின் உறுப்புனர்களை சந்தித்து ஆதரவு கோருவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இதையடுத்து திரியாய் ம.கி.அ.சங்க செயலர், திரியாய் கி.அ.சங்க தலைவர், திரியாய் பள்ளியின் அபிவிருத்திச் சங்கச் செயலர், திரியாய் விவசாய சங்கத் தலைவர், கட்டுக்குளம் ம.கி.அ.சங்கத் தலைவர், கட்டுக்குளம் விவசாயச் சங்கத் தலைவர், கல்லம்பத்தை ம.கி.அ.சங்கத் தலைவர், கல்லம்பத்தை கி.அ.சங்கத் தலைவர், மதுரங்குடா கி.அ.சங்கச் செயலர், நாவற்சோலை கி.அ.சங்கத் தலைவர், நாவற்சோலை பாடசாலை அபிவிருத்திச் சங்கச் செயலர் ஆகியோரை நேற்று (28) நேரில் சந்தித்து தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவு கோரி கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசிய பொதுக்கட்டமைப்பை சேர்ந்த யதீந்திரா, மற்றும் கதிர் திருச்செல்வம் ஆகியோர் இக்கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.