இலங்கையின் ஒரு சில பகுதிகளில் மாத்திரம் மழைக்கு வாய்ப்பு!
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில பகுதிகளிலும், வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் சில மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40-50 வரை பலத்த காற்று வீசக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்களுக்கு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 06 ஆம் திகதி வரை சூரியன் தென் திசையில் இலங்கையின் அட்சரேகைகளுக்கு மேல் நேரடியாக காணப்படும் என்பதால் இன்று (31) பிற்பகல் 12.10 மணிக்கு ரம்பேவ, தோபூர் மற்றும் மகாவிளச்சி பகுதிகள்.