வவுனியாவில் சஜித் பிரேமதாசாவிற்கான பிரச்சார கூட்டத்தில் சலசலப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
வவுனியாவில் சஜித் பிரேமதாசாவிற்கான பிரச்சார கூட்டத்தில் சலசலப்பு!

வவுனியா வெளிக்குளம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான விருந்தினர் மண்டபத்தில் இன்று (31.08) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து பிரச்சார கூட்டம் ஒன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினரால்(ACMC) ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

குறித்த பிரச்சார கூட்டமானது இன்று மாலை 5மணியளவில் ஆரம்பிக்க இருப்பதாகவும் அதனை தொடர்ந்து 6 மணிக்கு தேர்தல் காரியாலயம் ஒன்றை பட்டானிச்சூர் பகுதியில் திறந்து வைப்பது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில்  இரவு 7 மணியை தாண்டியும் பிரச்சார மேடைக்கு விருந்தினர்கள் சமூகம் தரவில்லை என்பதுடன் பிரதம விருந்தினரான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் (ACMC) தலைவரும் முன்னால் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுத்தீன் அவர்கள் இதுவரை மேடைக்கு சமூகம் தராமையால் நிகழவுகள் ஆரம்பிக்கப்படவில்லை.

எனவே அப்பகுதியில் நீண்ட நேரமாக காத்திருந்த மக்கள் மத்தியில் சிறு சலசலப்பு உருவாகியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4