சட்டவிரோதமான சிகரெட்டுக்களுடன் நபர் ஒருவர் கைது!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
சட்டவிரோதமான சிகரெட்டுக்களுடன் நபர் ஒருவர் கைது!

டுபாயில் இருந்து இலங்கைக்கு வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட் தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் கட்டுநாயக்க விமான நிலையப் பிரிவினரால் சந்தேகநபர் இன்று (01.09) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடையவராவார்.   

சந்தேக நபரிடம் இருந்து 20,000 சட்டவிரோத சிகரெட்டுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் கட்டுநாயக்க விமான நிலைய பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4