மூன்றாம் உலக போர் உருவாகும் : டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களான டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோர் மோதிக்கொள்ளும் முதல் நேரடி விவாதம் இன்று (11.09) இடம்பெற்றது.
இந்த விவாதத்தில், இஸ்ரேல் - ஹமாஸ் போர், உக்ரைன் - ரஷியா இடையேயான போர், அமெரிக்காவின் பணவீக்கம் மற்றும் கருக்கலைப்பு விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் முக்கியத்துவம் பெற்றிருந்தன.
இதன்போது கருத்து தெரிவித்த டொனால்ட் டிரம்ப், பைடன் ஆட்சியில் பணவீக்கத்தால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவரது ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளாகப் பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்தது. நான் ஆட்சிக்கு வந்தால் வரியைக் குறைத்து பொருளாதாரத்தை மேம்படுத்துவேன்.
"கமலா ஹாரிஸ் ஒரு கம்யூனிஸ்ட். அவரிடம் எந்த திட்டமும் இல்லை. கமலா ஹாரிஸ் ஜனாதிபதியானால் அமெரிக்காவில் கச்சா எண்ணெய் உற்பத்தி நின்றுவிடும்.
அமெரிக்கா தற்போது செல்லும் பாதையில் தொடர்ந்து பயணித்தால் மூன்றாம் உலகப் போர் உருவாகும் எனக் குறிப்பிட்டார்.