கெஹலியவிற்கு பிணையில் செல்ல அனுமதி : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
கெஹலியவிற்கு பிணையில் செல்ல அனுமதி : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட 3 பேருக்குப் பிணையில் செல்ல மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.  

தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசி மருந்துகளைக் கொள்வனவு செய்தமை தொடர்பில் மேற்படி சந்தேகநபர்கள் கடந்த பெப்ரவரி 2ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.  

சந்தேக நபர்கள் இன்று (11) மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4