கடனில் சிக்கித் தவிக்கும் மாலைத்தீவுக்கு கூடுதல் நிதியுதவி அளிக்கும் சீனா!
ஏற்கனவே கடனில் சிக்கித் தவிக்கும் மாலைத்தீவுக்கு கூடுதல் நிதியுதவி அளிக்க சீனாவும் மாலைதீவும் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்கவும் உதவும் என்று சீனா கூறுகிறது. இரு நாடுகளின் உள்ளூர் நாணயங்களில் நடப்புக் கணக்கு பரிவர்த்தனைகள் மற்றும் நேரடி முதலீடுகள் செய்யக்கூடிய அமைப்பை தயாரிப்பதன் மூலம் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நாடுகளுக்கு இடையே முதலீடு மற்றும் வணிக வாய்ப்புகளை அதிகரிக்க வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.
எனினும், இந்த ஒப்பந்தம் தொடர்பான மேலதிக தகவல்களை சீனா வெளியிடவில்லை. கடனில் சிக்கித் தவிக்கும் மாலைத்தீவு கடனைத் தவிர்க்க முடியாமல் திணறி வருகிறது.
சீனாவைத் தவிர, மாலைத்தீவு அரசும் உள்ளூர் பணப் பரிவர்த்தனைகளை அனுமதிக்க இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ள முயற்சி செய்து வருவதாகக் கூறப்படுகிறது.