சீனாவில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது வரம்பு அதிகரிப்பு

#China #government #Employees #Age #retirement
Prasu
2 months ago
சீனாவில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது வரம்பு அதிகரிப்பு

சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் தொகை சரிந்து வருகிறது. அதே வேளையில் அங்கு வயதானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அங்கு 5ல் ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்டவராக உள்ளார். கடந்த 1949ல் 36 ஆண்டுகளாக இருந்த சீனர்களின் சராசரி ஆயுள் தற்போது 78 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. 

ஆனால் கடந்த 75 ஆண்டுகளில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது ஆண்களுக்கு 60, பெண்களுக்கு 55 (உடல் உழைப்பு தொழில்களுக்கு 50) என்ற நிலையில் மாற்றமில்லை. இதனால் அங்கு ஓய்வூதியம் பெறுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது.

இது அந்த நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில் ஓய்வு பெறும் வயது வரம்பை சீன அரசு உயர்த்தியுள்ளது. 

அதன்படி ஆண்களுக்கு ஓய்வு பெறும் வயது 60ல் இருந்து 63 ஆகவும், பெண்களுக்கு 55ல் இருந்து 58 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 

 அதே போல் உடல் உழைப்பு தொழில்களில் ஈடுபடும் பெண்களுக்கு ஓய்வு பெறும் வயது 50ல் இருந்து 55 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த

புதிய கொள்கை அடுத்த ஆண்டு (2025) ஜனவரி முதல் அமலுக்கு வரும் எனவும், அடுத்த 15 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!