மேஷ ராசியினர் கவனமாக செயல்பட வேண்டிய நாள் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
3 days ago
மேஷ ராசியினர் கவனமாக செயல்பட வேண்டிய நாள் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வெளியூர் பயணத்தில் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும். பரணி: மனதில் இருந்த குழப்பம் விலகும் நாள். உங்கள் அணுகுமுறையால் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். கார்த்திகை 1: வழிபாட்டால் மனம் மகிழும் நாள். உடல் நிலையில் இருந்த பாதிப்பு நீங்கும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நீங்கள் நினைத்திருந்த வேலைகள் நிறைவேறும். பெரியோர் ஆலோசனை நன்மை தரும்.ரோகிணி: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் சில சங்கடங்கள் தோன்றும். மிருகசீரிடம் 1,2: நினைப்பதை சாதிக்கும் நாள். பழைய பிரச்னைகள் முடிவிற்கு வரும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: நன்மையான நாள். நேற்று ஏற்பட்ட தடைகள் விலகும். வசதி வாய்ப்பு அதிகரிக்கும்.திருவாதிரை: முயற்சி இழுபறியாகும் என்றாலும் வருமானத்தில் ஏற்பட்ட தடைகளை சரிசெய்வீர்.புனர்பூசம் 1,2,3: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். சிந்தித்து செயல்படுவதால் சங்கடங்கள் நீங்கும்.

கடகம்

புனர்பூசம் 4: மகிழ்ச்சியான நாள். உங்கள் செயல் வெற்றியாகும். பணவரவு திருப்தி தரும்.பூசம்: வியாபாரத்தில் எதிர்பாராத நெருக்கடியை சந்திப்பீர். திட்டமிட்டிருந்த வேலைகள் தள்ளிப்போகும்.ஆயில்யம்: ஆதாயமான நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றியும் பணவரவும் உண்டாகும்.

சிம்மம்

மகம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். திட்டமிட்டு செயல்பட்ட வேலையும் இழுபறியாகும். பூரம்: விருப்பம் நிறைவேறும் நாள். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். உத்திரம் 1: நிரந்தர வருமானத்திற்கு வழி காண்பீர். உங்கள் முயற்சி ஆதாயமாகும். சேமிப்பில் கவனம் செல்லும்.

கன்னி

உத்திரம் 2,3,4: முன்னேற்றமான நாள். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். அஸ்தம்: அமைதி காக்க வேண்டிய நாள். மனம் குழப்பமடையும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். சித்திரை 1,2: உறவினர்கள் உதவியால் முன்னேற்றம் காணும் நாள். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர்.

துலாம்

சித்திரை 3,4: செயல்களில் ஏற்பட்ட தடைகள் விலகும் நாள். உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்.சுவாதி: திட்டமிட்டிருந்த வேலைகளை மாற்றம் செய்வீர். குடும்பத்தினரின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்.விசாகம் 1,2,3: நன்மையான நாள். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும்.

விருச்சிகம்

விசாகம் 4: நினைப்பது நிறைவேறும் நாள். உங்கள் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். அனுஷம்: வியாபாரத்தில் போட்டியாளர்கள் கை ஓங்கும் நாள். வேலையை திட்டமிட்டு செய்வது அவசியம்.கேட்டை: முயற்சியால் முன்னேற்றம் காண்பீர்கள். பெரியோர் ஆதரவால் உங்கள் எண்ணம் நிறைவேறும்.

தனுசு

மூலம்: குடும்பத்தினரை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். பூராடம்: எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் வந்து சேரும். நெருக்கடி நீங்கும்.உத்திராடம் 1: நன்மையான நாள். நீண்டநாள் பிரச்னை ஒன்றில் நல்ல முடிவு ஏற்படும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர்.திருவோணம்: அமைதி காக்க வேண்டிய நாள். உங்கள் செயல்களில் தடைகளை சந்திப்பீர். அவிட்டம் 1,2: விருப்பம் நிறைவேறும் நாள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர் அதிகரிப்பர்.

கும்பம்

அவிட்டம் 3,4: மகிழ்ச்சியான நாள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.சதயம்: குடும்பத்தினரின் எதிர்ப்புக்கு ஆளாகும் நாள். செயல்களில் நெருக்கடி ஏற்படும். பூரட்டாதி 1,2,3: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். வருமானம் அதிகரிக்கும்.

மீனம்

பூரட்டாதி 4: யோகமான நாள். உற்சாகமாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர்.உத்திரட்டாதி: வியாபாரத்தில் போட்டியாளர்களின் கை ஓங்கும். குடும்பத்தினருடன் வீண் வாக்கு வாதம் ஏற்படும். ரேவதி: எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.