படோவிட்ட மலைப்பகுதியில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
படோவிட்ட மலைப்பகுதியில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி!

படோவிட்ட மலைப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். 

நேற்று (15.09) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் படோவிட்ட நான்காம் கட்டப் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு முன்பாக சுடப்பட்டுள்ளார்.  

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

படோவிட்ட மலையில் வசித்து வந்த 31 வயதுடைய தரிந்து மதுஷன் சுவாரிஸ் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 துப்பாக்கிச்சூடு நடத்தியது யார் என்பது இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், இது தொடர்பான விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4