வவுனியாவில் போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களை புனர்வாழ்வளிக்க விசேட நிலையம் ஸ்தாபிப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
வவுனியாவில் போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களை புனர்வாழ்வளிக்க விசேட நிலையம் ஸ்தாபிப்பு!

ஆபத்தான போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களை புனர்வாழ்வளிக்க விசேட நிலையமொன்றை நிறுவுவதற்கு புனர்வாழ்வு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

வவுனியா பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்த நிலையத்தில் 100 பெண்கள் புனர்வாழ்வளிக்கப்பட முடியும் என தெரிவிக்கப்படுகிறது.  

அதன்படி, நீதிமன்ற உத்தரவுப்படி போதைக்கு அடிமையான பெண்களுக்கு இந்த மையம் மூலம் மறுவாழ்வு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுக்கு புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இதன்படி, போதைப்பொருளுக்கு அடிமையான பெண்களை வவுனியாவில் அமைந்துள்ள இந்த புதிய புனர்வாழ்வு நிலையத்திற்கு புனர்வாழ்விற்காக பரிந்துரைக்குமாறு நீதிச்சேவை ஆணைக்குழு அனைத்து நீதிபதிகளுக்கும் அறிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4