வாழை ஒரு ஆபாச திரைப்படம் : இயக்குனர் மாரி செல்வராஜ் மீது குவியும் குற்றச்சாட்டு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
வாழை ஒரு ஆபாச திரைப்படம் : இயக்குனர் மாரி செல்வராஜ் மீது குவியும் குற்றச்சாட்டு!

வாழை படம் குறித்து பிரபல எழுத்தாளர் சாரு நிவேதா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். மற்றவர்கள் பாராட்டிய வாழை படத்தை, இது மிக மோசமான ஒரு ஆபாச படம் என்று சாரு நிவேதிதா குற்றம் சாட்டியுள்ளார்.

 சமீபத்திய நேர்காணல் ஒன்றில் எழுத்தாளர் சாரு நிவேதிதா கூறுகையில், பரியேறும் பெருமாள் படத்தை பலரும் கண்டுக்கொள்ளாத போது, முதலில் அந்த படத்தை பாராட்டியவன் நான்தான். ஆனால் வாழை படத்தை பார்க்க ஆவலாக சென்ற எனக்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சியது. 

இளம் வயதில் பூங்கொடி டீச்சரை காதலிப்பது போன்ற காட்சிகளை வைத்தது, படத்தில் மிகப்பெரிய தவறாக இருக்கிறது. அம்மா மாதிரி, அக்கா மாதிரி இருக்கறீங்க என்று சொல்லும் அளவுக்கு உடல் அசைவுகளும், சிந்தனைகளும் இல்லை. மலையாள நடிகையை டீச்சர் கேரக்டரில் நடிக்க வைத்த முறையிலேயே இயக்குனரின் மனநிலை தெரிகிறது. 

அந்த ஊரில் கவர்ச்சியான பெண்ணாக அவர் மட்டுமே இருக்கிறார். டிவிஎஸ் 50 மொபட்டில் முன்னாடி உட்கார வைத்து காட்டிய பொசிஷனில் காமத்தை விதைத்துள்ளார் இயக்குனர். வாழை வெறும் ஆபாசப் படம் மட்டுமல்ல. 

சமூக விரோதப் படமாகவும் இருக்கிறது. உணர்ச்சிகளை தூண்டும் விதமாக சர்ப்ரைஸ் காட்சிகளை அடுக்கி வைத்து, மாரி செல்வராஜ் பல விஷயங்களை காட்டியிருக்கிறார்.

 நான் கடவுள் படத்தில் குழந்தைகளை கடத்தி, ஊனமாக்கி பிச்சை எடுத்து சம்பாதிப்பதை போல, வாழை படத்தில் வறுமையை காட்டி பல கோடிகளை சம்பாதித்து வருகிறார் மாரி செல்வராஜ், என்று விமர்சித்துள்ளார் எழுத்தாளர் சாரு நிவேதிதா. இது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4