நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் மூவர் பலி!

#SriLanka #sri lanka tamil news
Thamilini
1 year ago
நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் மூவர் பலி!

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற பல ஆபத்தான வீதி விபத்துக்களில் 03 பேர் உயிரிழந்துள்ளனர்.  

தெஹியத்தகண்டிய அரகன்வில வீதியின் 02 ஆம் இலக்கத்திற்கு அருகில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மரமொன்றில் மோதியுள்ளது.  

விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து தெஹி அட்டகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். 

மேவாச்சிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டி - யாழ்ப்பாணம் வீதியில் மரகஹா வளைவுக்கு அருகில் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.  

விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி, அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் காயமடைந்துள்ளதுடன், ரம்பேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 7 வயது சிறுமியாகும். 

இதேவேளை, ஆராச்சிக்கட்டுவ நகரில் இருந்து வெலிபலஸ்ஸ நோக்கி பயணித்த துவிச்சக்கர வண்டி, அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளதுடன், 41 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4