லெபனான் உள்ளிட்ட பல பகுதிகளில் குண்டு வெடிப்பு தாக்குதல்!
லெபனான் தலைநகர் பெய்ரூட் உட்பட பல பகுதிகளில் குண்டு வெடிப்புகள் பதிவாகியுள்ளன.
இந்த குண்டுவெடிப்புகளில் 09 ஹிஸ்புல்லா போராளிகள் கொல்லப்பட்டதாகவும் கிட்டத்தட்ட 3,000 பேர் காயமடைந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காயமடைந்த 200 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்தவர்கள் தங்கள் செய்திப் பரிமாற்றத்துக்குப் பயன்படுத்தப்பட்ட “பேஜர் மெசேஜ் எக்ஸ்சேஞ்ச்” இயந்திரங்கள் ஒரே நேரத்தில் வெடித்து சிதறியதில் அவர்கள் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
சாலைகள், வணிக வளாகங்கள், கடைகள் மற்றும் வீடுகளுக்கு அருகில் இந்த வெடிப்புகள் நடந்துள்ளன. இந்த குண்டுவெடிப்புகளை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் நடத்தியதாக ஹிஸ்புல்லா போராளிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரேடியோ சிக்னல் ஜாமர் முறையைப் பயன்படுத்தி இந்த சைபர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த குண்டுவெடிப்புகளில் ஹிஸ்புல்லாவின் மூத்த தலைவர் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.