கடக ராசியினர் விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
17 hours ago
கடக ராசியினர் விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். செலவு அதிகரிக்கும். அலைச்சல் ஏற்படும். திட்டமிட்டு செயல்படுவது நல்லது.பரணி: தடைபட்ட வேலை நிறைவேறும். வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பால் முயற்சி வெற்றியாகும். கார்த்திகை 1: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் போட்டியாளர் கை ஓங்கும். முயற்சி இழுபறியாகும். வரவில் தடை உண்டாகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: சூழ்நிலையை அறிந்து செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் நெருக்கடி ஏற்படும். எதிர்பார்ப்பு தள்ளிப் போகும்.ரோகிணி: யோகமான நாள். எதிர்பார்த்த வரவை இன்று அடைவீர். உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். நெருக்கடி நீங்கும்.மிருகசீரிடம் 1,2: உழைப்பு அதிகரிக்கும் நாள். பணிபுரியும் இடத்தில் பிரச்னைகளை சந்திப்பீர். பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது. 

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். வேலையாட்கள் ஒத்துழைப்பு உண்டாகும். தொழிலில் ஏற்பட்ட தடை நீங்கும்.திருவாதிரை: நினைப்பது நிறைவேறும் நாள். திட்டமிட்டு செயல்படுவீர். பழைய கடன் வசூலாகும். முயற்சி வெற்றியாகும் நாள்.புனர்பூசம் 1,2,3: லாபமான நாள். உங்கள் மதி நுட்பத்தால் எண்ணம் நிறைவேறும். நீங்கள் மேற்கொள்ளும் வேலை லாபம் தரும். 

கடகம்

புனர்பூசம் 4: கோயில் வழிபாட்டால் சங்கடம் விலகும் நாள். இழுபறியாக இருந்த முயற்சி நிறைவேறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.பூசம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். நீங்கள் ஈடுபடும் வேலையில் எதிர்பாராத தடை உண்டாகும்.ஆயில்யம்: வருமானம் அதிகரிக்கும் நாள். உங்கள் பிரச்னைக்கு முடிவு காண்பீர். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். 

சிம்மம்

மகம்: அமைதி காக்க வேண்டிய நாள். வேலைகளில் எதிர்பாராத பிரச்னை தோன்றும். முக்கிய வேலைகளை ஒத்தி வைப்பது நல்லது.பூரம்: போராடி வெற்றி பெற வேண்டிய நாள். முடிவு செய்த வேலைகளை நடத்தி முடிப்பீர். எதிர்பார்த்த தகவல் வரும்.உத்திரம் 1: குடும்பத்தினரின் ஆலோசனைகளால் நன்மையடையும் நாள். எதிர்பார்த்த லாபம் தள்ளிப்போகும். அலைச்சல் அதிகரிக்கும். 

கன்னி

உத்திரம் 2,3,4: எதிர்ப்பை சந்திக்கும் நாள். கூட்டுத் தொழிலில் கவனம் செலுத்துவது நல்லது. நண்பர்களுடன் கருத்து வேறுபாடு வேண்டாம்.அஸ்தம்: விருப்பம் நிறைவேறும் நாள். உங்கள் செயல் வெற்றியாகும். குழப்பம் விலகும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். சித்திரை 1,2: தடைகளை சந்திக்கும் நாள். திட்டமிட்டு மேற்கொண்ட வேலையிலும் இழுபறி ஏற்படும். இன்று விவேகத்துடன் செயல்படுவது நல்லது. 

துலாம்

சித்திரை 3,4: வேலைபளுவால் நெருக்கடிக்கு ஆளாகும் நாள். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.சுவாதி: முன்னேற்றமான நாள். போட்டியாளர்கள் தொல்லை விலகும். வழக்கு சாதகமாகும். சுறு சுறுப்பாக செயல்படுவீர்.விசாகம் 1,2,3: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும் நாள். பணிபுரியும் இடத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும். வருமானம் உயரும். 

விருச்சிகம்

விசாகம் 4: செல்வாக்கு உயரும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றியுண்டாகும். யோசிக்காமல் செய்த செயலிலும் லாபம் ஏற்படும்.அனுஷம்: கோயில் வழிபாட்டில் நெருக்கடி நீங்கும் நாள். வேலைகளில் கவனமாக இருப்பது நல்லது.கேட்டை: ஆதாயமான நாள். திட்டமிட்டிருந்த வேலைகளில் கவனம் செலுத்துவீர். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். 

தனுசு

மூலம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். பிரச்னை தேடிவரும்.பூராடம்: மகிழ்ச்சியான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். இழுபறியாக இருந்த வரவு வரும்.உத்திராடம் 1: உழைப்பால் உயர்வு காண வேண்டிய நாள். செயல் இழுபறியானாலும் போராடி வெற்றி காண்பீர். 

மகரம்

உத்திராடம் 2,3,4: எதிர்ப்பை வெல்லும் நாள். கவனமாக செயல்பட்டு உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர். வரவு அதிகரிக்கும்.திருவோணம்: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். வம்பு, வழக்குகளில் சாதகமான நிலை உண்டாகும். பணியாளர்களால் நன்மை ஏற்படும்.அவிட்டம் 1,2: வேலையில் கவனம் செலுத்த வேண்டிய நாள். எண்ணத்தை சிதறவிட வேண்டாம். அதனால் பாதிப்புண்டாகும்.

கும்பம்

அவிட்டம் 3,4: யோசித்து செயல்பட வேண்டிய நாள். வேலையில் ஒருசிலர் மறைமுகமாக ஈடுபடுவர். செயல்களில் கவனம் செலுத்துவது நல்லது.சதயம்: வரவு அதிகரிக்கும் நாள். பிறருக்காக உங்களை மாற்றிக் கொள்வீர். மனம் விரும்புவதை அடைவீர்.பூரட்டாதி 1,2,3: திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண வேண்டிய நாள். நீங்கள் ஈடுபடும் ஒவ்வொரு செயலிலும் நிதானமும் அவசியம். 

மீனம்

பூரட்டாதி 4: விருப்பம் நிறைவேறும் நாள். திட்டமிட்டு செயல்பட்டு முயற்சியில் வெற்றி அடைவீர்.உத்திரட்டாதி: குழப்பத்திற்கு ஆளாகும் நாள். எதிர்பாராத நெருக்கடிக்கு ஆளாவீர். பணியாளர் தங்கள் வேலையில் கவனமுடன் செயல்படுவது நல்லது.ரேவதி: நன்மையான நாள். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்த்த வரவு வரும். உங்கள் முயற்சி லாபமாகும்.