ரிஷப ராசியினருக்கு நெருக்கடி நீங்கும் நாள் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
3 hours ago
ரிஷப ராசியினருக்கு நெருக்கடி நீங்கும் நாள் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: நினைப்பது நிறைவேறும் நாள். எதிர்பார்த்த பணம்வரும். உங்கள் செல்வாக்கு உயரும். பரணி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நன்மை தரும்.கார்த்திகை 1: நேற்றைய நெருக்கடி விலகும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். வியாபாரம் விருத்தியாகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நெருக்கடி நீங்கும் நாள். திட்டமிட்டு செயல்படுவதால் வருமானம் அதிகரிக்கும். ரோகிணி: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வரவு ஒரு பக்கம் வந்தாலும் செலவு மறுபக்கம் தயாராக இருக்கும்.மிருகசீரிடம் 1,2: மகிழ்ச்சியான நாள். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வரவேண்டிய பணம் வரும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: வியாபாரத்தில் லாபம் காண்பீர். உறவினர் உதவியால் உங்கள் வேலை நடந்தேறும்.திருவாதிரை: எதிர்ப்புகள் தோன்றும் நாள். புதிய முயற்சி இழுபறியாகும். உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். புனர்பூசம் 1,2,3: யோகமான நாள். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

கடகம்

புனர்பூசம் 4: முன்னேற்றம் காணும் நாள். வாடிக்கையாளர் அதிகரிப்பால் வியாபாரத்தில் லாபம் காண்பீர். பூசம்: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். வேலை பளு கூடும். அலைச்சல் அதிகரிக்கும். ஆயில்யம்: நெருக்கடி நீங்கும் நாள். வேலைக்காக முயற்சித்து வந்தவர்களுக்கு எதிர்பார்த்த தகவல் வரும்.

சிம்மம்

மகம்: அலுவலகத்தில் இருந்த பிரச்னைகள் விலகும். உங்கள் அணுகுமுறை ஆதாயம் தரும்.பூரம்: செயல்களில் சிரமம் தோன்றும். உங்களுக்கு எதிராக சிலரின் செயல் இருக்கும். கவனமாக இருப்பது அவசியம்.உத்திரம் 1: எதிர்பார்த்த பணம் வரும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் காண்பீர். வழிபாட்டில் பங்கேற்பீர்.

கன்னி

உத்திரம் 2,3,4: எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். தொழிலில் கவனம் செலுத்தி லாபம் அடைவீர். அஸ்தம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் செயல்களில் பின்னடைவும் மறைமுக எதிர்ப்பும் உண்டாகும்.சித்திரை 1,2: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். நிதானமாக செயல்பட்டு நன்மை அடைவீர்.

துலாம்

சித்திரை 3,4: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வந்து மகிழ்ச்சி அடைவீர். நட்பு வட்டம் விரிவடையும். சுவாதி: சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். கூட்டுத் தொழிலில் கவனம் செலுத்துவது அவசியம். விசாகம் 1,2,3: வருமானம் அதிகரிக்கும் நாள். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட சங்கடம் விலகும்.

விருச்சிகம்

விசாகம் 4: அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். உங்கள் முயற்சியில் போராடி வெற்றி அடைவீர்.அனுஷம்: நேற்றைய விருப்பம் நிறைவேறும் நாள். ஆரோக்கியம் சீராகும். நினைப்பது நிறைவேறும். உங்கள் செல்வாக்கு உயரும்.கேட்டை: ஆதாயமான நாள். இழுபறியாக இருந்த பிரச்னையில் முடிவு காண்பீர். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். திறமை வெளிப்படும்.

தனுசு

மூலம்: தெய்வ அருளால் முயற்சிகள் வெற்றியாகும் நாள். வியாபாரம் விருத்தியாகும். வருமானம் அதிகரிக்கும். பூராடம்: அமைதி காக்க வேண்டிய நாள். கடும் முயற்சிக்குப்பின் உங்கள் வேலையில் வெற்றி காண்பீர்.உத்திராடம் 1: விலகிச்சென்ற உறவுகள் மீண்டும் வருவர். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: திறமையாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். மனதில் இருந்த சங்கடம் விலகும்.திருவோணம்: செயல்களில் தடைகளை சந்திக்கும் நாள். உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம்.அவிட்டம் 1,2: பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். வேலையில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்.

கும்பம்

அவிட்டம் 3,4: திட்டமிட்டு செயல்பட்டு நினைப்பதை சாதிப்பீர். வெளியூர் பயணம் ஆதாயமாகும்.சதயம்: நெருக்கடியான நாள். எதிர்பார்ப்புகள் தள்ளிப்போகும். குடும்பத்தில் சில சங்கடங்கள் தோன்றும். பூரட்டாதி 1,2,3: முன்னேற்றமான நாள். பழைய முதலீட்டில் இருந்து எதிர்பார்த்த பணம்வரும்.

மீனம்

பூரட்டாதி 4: அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும் நாள். வருமானத்தில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர்கள். உத்திரட்டாதி: பிறரை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். உடன் பணிபுரிபவர்களால் நெருக்கடிகள் தோன்றும். ரேவதி: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும்.