பங்களாதேஷ் அணிக்கு 515 ஓட்டங்கள் இலக்கு

#India #Test #Bangladesh
Prasu
2 hours ago
பங்களாதேஷ் அணிக்கு 515 ஓட்டங்கள் இலக்கு

இந்தியா- வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. 

டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா அஸ்வின் சதத்தால் 376 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் 149 ரன்னில் சுருண்டது.

பின்னர் 227 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. சுப்மன் கில், ரிஷப் பண்ட் ஆகியோர் இன்றைய 3-வது நாள் ஆட்ட உணவு இடைவேளைக்கு முன் அரைசதம் அடித்தனர். உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியதும் ரஷிப் பண்ட் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 

இது அவரின் 6-வது சதம் ஆகும். இதன்மூலம் டோனி சாதனையை சமன் செய்தார். டோனி விக்கெட் கீப்பராக 6 சதம் அடித்துள்ளார். அதை ரிஷப் பண்ட் தற்போது சதம் செய்துள்ளார். ரிஷப் பண்ட்-ஐ தொடர்ந்து சுபமன் கில் சதம் அடித்தார்.

இந்தியா 4 விக்கெட் இழப்பிற்க 287 ரன்கள் அடித்திருக்கும்போது 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. 

மொத்தமாக இந்தியா 514 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் வங்கதேச அணிக்கு 515 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுப்மன் கில் 119 ரன்னுடனும், கே.எல். ராகுல் 22 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.