ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கிய சுவிற்சர்லாந்து

#Switzerland #America #Israel #War #Iran #L4 #airspace
Prasu
1 hour ago
ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கிய சுவிற்சர்லாந்து

பிப்ரவரி 28 முதல் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஈரானுக்கு ஆதரவாக அமெரிக்காவின் செல்லப்பிள்ளை சுவிற்சர்லாந்து களமிறங்கியுள்ளது.

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளுடன் தொடர்புடைய விமானங்கள் சுவிஸ் வான்வெளியில் பறக்க அனுமதி கோரி அமெரிக்கா விடுத்த இரண்டு கோரிக்கைகளை, அந்நாட்டின் நடுநிலைமைச் சட்டத்தைக் காரணம் காட்டி சுவிட்சர்லாந்து நிராகரித்துள்ளது.

ஆயுத மோதலில் ஈடுபட்டுள்ள தரப்பினருக்குச் சொந்தமான விமானங்கள், இராணுவ நோக்கங்களுக்காக சுவிஸ் வான்வெளியைக் கடந்து செல்வதை நடுநிலைமை விதிகள் தடை செய்கின்றன என்று சுவிஸ் அரசாங்கம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இருப்பினும், மனிதாபிமான அல்லது மருத்துவப் பணிகள், காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்லுதல், அல்லது மோதலுடன் நேரடியாகத் தொடர்பில்லாத விமானங்கள் போன்ற சில சூழ்நிலைகளில், விமானங்கள் கடந்து செல்ல அனுமதிக்கிறது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!