இம்முறை மும்முனைப் போட்டியாக மாறிய தேர்தல்: முடிவுகள் சர்ச்சைக்குரியதாக அமைந்து விடுமா?

#SriLanka #Election
Mayoorikka
2 hours ago
இம்முறை மும்முனைப் போட்டியாக மாறிய தேர்தல்: முடிவுகள் சர்ச்சைக்குரியதாக அமைந்து விடுமா?

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் நிறைவடைந்திருக்கின்றது.

 இன்று காலை 7:00 மணிக்கு வாக்களிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இன்று மாலை 4 மணி அளவில் இந்த வாக்களிப்பு செயற்பாடுகள் முடிவடைந்து வாக்கு பெட்டிகள் தேர்தல் மத்திய நிலையங்களை நோக்கி எடுத்துச் செல்லப்பட்டு தற்பொழுது வாக்குகள் என்னும் செயற்பாடுகள் ஆரம்பமாகி இருக்கின்றன.

 இந்த ஜனாதிபதி தேர்தலானது கடந்த ஜூலை மாதம் 26 ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்தது தேர்தலுக்கு அறிவித்தல் வெளியிடப்பட்ட பின் சுமார் 40 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பனம் செலுத்தியிருந்தனர். 

39 வேட்பாளர்கள் மட்டுமே வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்த நிலையில் சிறிது நாட்களிலேயே ஒரு வேட்பாளர் காலமாகிய நிலையில் இன்றைய தினம் 38 வேட்பாளர்களே போட்டியில் இருந்தனர். இம்முறை தேர்தல் தொடர்பிலே தேர்தல் அவதானிப்பாளர்களும் தேர்தல் திணைக்களமும் மிகவும் சுகமாக நடைபெற்று முடிந்த தேர்தலாக இது இருக்கின்றது என்பதை தமது கருத்துக்களூடாக வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

 இந்த தேர்தல் ஏனைய தேர்தல்களை விட சற்று வித்தியாசமானது ஒன்றாக எங்களால் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. அதாவது இலங்கையின் வரலாற்றிலே 1948 ஆம் ஆண்டுக்கு பின் ஐக்கிய தேசியக் கட்சி என்கின்ற ஒரு கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்கின்ற ஒரு கட்சியுமே மாறி மாறி இலங்கை ஆட்சி செய்து வந்திருப்பது இலங்கை மக்களுக்கு உலக மக்களுக்கும் தெரிந்திருக்க கூடிய ஒரு விடயம். 

ஆனால் இன்றைய தேர்தல் வேட்பாளர் பட்டியலிலே இந்த இரண்டு கட்சிகளும் இல்லை இந்த கட்சிகளிலே இருந்து சில பிரிவடைந்த வேட்பாளர்களை இன்றைய தினத்தில் போட்டியாளர்களாக அதுவும் பிரதான வேட்பாளர்களாக இருப்பதே எங்களால் காணக்கூடியதாக இருக்கின்றன.

 ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற அதனுடைய தலைவர் ரனில் விக்கிரமசிங்க அதனுடைய பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசா ஆகியோர் பிரதான போட்டியாளர்களாக காணப்பட்ட அதேவேளை ஸ்ரீலங்கா சுந்தர கட்சியின் சார்பாக யாரும் இங்கே போட்டியிடவில்லை பதிலாக அவர் அதிலிருந்து பிரிந்து சென்ற பலர் இந்த இரண்டு முக்கிய வேட்பாளர்களுக்கும் ஆதரவளித்ததை காணக்கூடியதாக இருக்கின்றது.

 அடுத்ததாக இந்த தேர்தலில் மிகவும் முக்கியமான ஒரு கட்சியாக காணப்பட்டது ஜேவிபி எனப்படுகின்ற கட்சி ஜே வி பி கடந்த காலங்களில் இலங்கையின் வரலாற்றிலே ஒரு பேசு பொருளாக படிப்படியாக வளர்ச்சி அடைந்து வந்த ஒரு கட்சியாக காணப்படுகின்ற நிலையிலே மிகக் குறைந்த அளவிலான வாக்கு எண்ணிக்கையில் குறைந்த வேட்பாளர்களை கொண்டிருந்த கட்சி இம்முறை பாரியளவிலான ஒரு வெற்றியை ஈட்டும் என இலங்கையின் ஊடகங்களும் அரசியல் ஆய்வாளர்களும் கருத்து வெளியிட்டிருந்தனர்.

 அந்த வகையில் இந்த முறை கடந்த காலத்திலேயே இருமுனைப் போட்டியாக காணப்பட்ட தேர்தல்கள் இந்த முறை மும்முனை போட்டியாக மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இந்த முறை இந்த ஜனாதிபதி தேர்தலில் ஐம்பது விதமான வாக்குகளை எந்த வேட்பாளரும் பெற்றுக் கொள்வது கடினம் என்ற ஒரு அவதானிப்பும் இருக்கிறது. 

இதன் காரணமாக இந்த முதல் கட்ட வாக்கு எண்ணும் பணிகள் முடிவடைந்து விருப்பு வாக்குகளை எண்ணும் பணிகள் நடைபெறலாம். விருப்பு வாக்குகளின் ஊடாகவே இன்றைய தினம் நடைபெற்ற இந்த வாக்களிப்பின் ஊடாக எதிர்கால ஜனாதிபதி தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. 

அந்த வகையிலே பிரதான வேட்பாளர்களாக ரணில் விக்ரமசிங்க சஜித் பிரேமதாசர் அனுரகுமார திசாநாயக்க ஆகியோர் காணப்படுகின்றனர். ஏனைய வேட்பாளர்கள் இந்த போட்டியிலே பாரியளவில் பேசப்படுபவர்களாக காணப்படவில்லை சஜித் பிரேமதாசா அவர்களுக்கும் பல சிவில் அமைப்புகளும் பல உதிரிக் காட்சிகளும் ஆதரவளித்திருந்தன. 

அவர் ஐக்கிய மக்கள் சக்தி என்கின்ற கட்சியின் சார்பாக போட்டியிட்டிருந்தார். ரணில் விக்ரமசிங்க சுயேட்சை வேட்பாளராக ஒரு புது வேட்பாளராக ஐக்கிய தேசிய கட்சி உட்பட பல உதிரிக் கட்சிகளின் ஆதரவோடு போட்டியிட்டிருந்தார். 

தேசிய மக்கள் சக்தி என்கின்ற பெயரிலே ஜேவிபியை முதன்மையாகக் கொண்டு பல சிவில் அமைப்புகளை ஆதரவாக கொண்டு போட்டியிட்டுருந்தார்.

 இந்த நிலையிலே தற்பொழுது வாக்குகள் எண்ணும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன நாளை மதியம் ஆவதற்கு இடையிலே இலங்கையின் ஜனாதிபதி யார் என்பதற்கான முடிவு அறிவிக்கப்படுகின்ற அதே சந்தர்ப்பத்திலே ஆரம்பித்து சற்று நேரத்திலே எங்களால் இந்த வாக்களிக்கப்பட்ட முறைமைகள் அல்லது விகிதங்களை வைத்து யார் தெரிவு செய்யப்படக்கூடும் என்ற ஒரு அனுமானத்திற்கு வரக்கூடியதாக இருக்கும் என்ற கேள்வியை மக்கள் முன்வைத்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

 அந்த வகையிலே இந்த தேர்தல் மிகவும் சிறப்பாக நடைபெற்ற முடிந்து இருப்பது இலங்கையில் ஒரு ஆறுதல் தரக்கூடிய விஷயமாக இருந்தாலும் முடிவுகள் சர்ச்சைக்குரியதாக அமைந்து விடுமா என மக்கள் ஆவலோடு முடிவுகளுக்காக காத்திருக்கின்றார்கள்.