அமெரிக்காவில் இந்திய தூதரக அதிகாரி உயிரிழப்பு
#Arrest
#America
#Embassy
#officer
Prasu
1 year ago
அமெரிக்காவின் வாஷிங்டனில் இந்திய தூதரக அதிகாரி ஒருவர் மர்மமான முறையில் இறந்தார். அவரது உடல் அலுவலக வளாகத்தில் கிடந்து உள்ளது. அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை.
இதுகுறித்து இந்திய தூதரகம் கூறும்போது, இந்தியத் தூதரகத்தின் உறுப்பினர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
அவரது உடலை விரைவாக இந்தியாவுக்கு கொண்டு செல்வதை உறுதி செய்வதற்காக அனைத்து ஏஜென்சிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம்.
இறந்தவர் தொடர்பான கூடுதல் விவரங்கள் குடும்பத்தின் தனியுரிமைக்காக வெளியிடப்படவில்லை.
இந்த துயர நேரத்தில் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் குடும்பத்தினருடன் உள்ளன என்று தெரிவித்தது.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.