மாற்றத்திற்காக வாக்களித்த இலங்கை மக்கள்: ஜனாதிபதியாகின்றார் அனுரகுமார திஸாநாயக்க

#SriLanka #AnuraKumara
Mayoorikka
2 hours ago
மாற்றத்திற்காக வாக்களித்த இலங்கை மக்கள்:  ஜனாதிபதியாகின்றார் அனுரகுமார திஸாநாயக்க

இலங்கை மாற்றத்திற்காக வாக்களித்து, நாட்டின் முதலாவது மார்க்சிஸ்ட் ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்கவை தெரிவு செய்துள்ளதாக ஞாயிற்றுக்கிழமை இதுவரை வெளியிடப்பட்ட முடிவுகள் தெரிவிக்கின்றன.

 திசாநாயக்க தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கைத் தவிர அனைத்து மாவட்டங்களிலும் முன்னிலை வகித்தார். ஞாயிற்றுக்கிழமை காலை வெளியிடப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஜனாதிபதி வேட்பாளர் 51% வாக்குகளைப் பெற்றுள்ளார்.

 திஸாநாயக்க புதிய ஜனாதிபதியாக ஞாயிற்றுக்கிழமை மாலை அல்லது திங்கட்கிழமை பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 சுமூகமான அதிகார மாற்றத்தை எதிர்பார்ப்பதாக அனுரகுமார திஸாநாயக்க சனிக்கிழமை தெரிவித்திருந்தார்.

 பிரச்சாரத்தின் போது, ​​திஸாநாயக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால், தீவிரவாதத்தை ஒடுக்குவதாக உறுதியளித்தார். எந்தவொரு குழுவிற்கும் மத்தியில் வெறுப்புணர்வை வளர்க்க தமது அரசாங்கம் இடமளிக்காது எனவும் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

 சட்டம் அனைவருக்கும் சமமானது என்றும் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க மற்றும் ரக்கர் வீரர் வசீம் தாஜுதீன் ஆகியோரின் கொலை உட்பட அனைத்து முக்கிய வழக்குகளும் விசாரிக்கப்படும் என்றும் தலைவர் கூறினார்.

 தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2024 ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தார் என்பதை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஞாயிற்றுக்கிழமை ஒப்புக்கொண்டார்.

 நீண்ட மற்றும் கடினமான பிரச்சாரத்திற்குப் பிறகு, தேர்தல் முடிவுகள் இப்போது தெளிவாக உள்ளன என்று சப்ரி கூறினார்.

 சஜித் பிரேமதாச தலைமையிலான சமகி ஜன பலவேகய (SJB) ஏற்கனவே 2024 ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டதுடன் திஸாநாயக்கவுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது.