உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் முதலிடம் பிடித்த சுவிட்சர்லாந்து
உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. US News & World Report என்னும் அமைப்பு ஆண்டுதோறும் உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலை வெளியிட்டுவருகிறது.
உலகம் முழுவதிலுமிருந்து 89 வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த கிட்டத்தட்ட 17,000 பங்கேற்பாளர்களின் கணக்கெடுப்பு இந்தப் பட்டியலைத் தொகுக்கப் பயன்படுத்தப்பட்டது, சுவிட்சர்லாந்து தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமாக ஏழாவது முறையாக உலகின் சிறந்த நாடு என்ற பட்டத்தை மீண்டும் ஒருமுறை பெற்றுள்ளது.
சுவிட்சர்லாந்தின் உயர் வாழ்க்கைத்தரம், பொருளாதார நிலைத்தன்மை, கல்வி அமைப்பு, சிறந்த தலைசிறந்த பாதுகாப்பு மற்றும் மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான சமநிலையை சீராக பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் என்னும் ஐந்து விடயங்கள், உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடம் வகிக்க காரணமாக அமைந்துள்ளன.
அத்துடன், குறைவான வேலையின்மை மற்றும் குடிமகன் ஒருவருக்கான உயர் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன், நாட்டின் வலிமையான பொருளாதாரம், உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்கள், உலகிலேயே குற்றச்செயல்கள் குறைவான நாடு என்னும் பெருமையும் கொண்ட நாடு தங்கள் நாடு என பெருமையுடன் கூறிக்கொள்கிறது
சுவிட்சர்லாந்து. 2024 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த 10 நாடுகளின் பட்டியல் பின்வருமாறு,
சுவிட்சர்லாந்து
ஜப்பான்
அமெரிக்கா
கனடா
ஆஸ்திரேலியா
ஸ்வீடன்
ஜெர்மனி
ஐக்கிய இராச்சியம்
நியூசிலாந்து
டென்மார்க்