போரில் அமைதிக்கு மிக அருகில் நாங்கள் - ஜெலன்ஸ்கி
குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்க பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் அமெரிக்கா நோக்கிப் படையெடுத்தனர்.
இந்தியா சார்பில் பிரதமர் மோடி அமெரிக்க சென்று நாடு திரும்பியுள்ளார். அந்த வகையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் அமெரிக்கா வந்திருந்தார். பிரதமர் மோடியையும் ஜெலன்ஸ்கி சந்தித்தார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கிய உக்ரைன் ரஷியா போர் தொடர்ந்து வரும் நிலையில் மேற்கத்திய நாடுகள் உதவியுடன் ரஷியாவை சமாளித்து வருகிறது. மேலும் ரஷிய பகுதிகளில் நுழைந்தும் உக்ரைன் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில் போர் முடிவுக்கு வரும் தறுவாயில் உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வாஷிங்க்டன் மாகாணத்தில் வைத்து ஏபிசி செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த ஜெலன்ஸ்கி, ரஷியா உடனான போரில் அமைதிக்கு மிக அருகில் நெருங்கியுள்ளதாக நாங்கள் கருதுகிறோம்.
எனவே போரை முடிவுக்குக் கொண்டுவரும் தருவாயில் உள்ளோம் என்று தெரிவித்துள்ளார். மேற்கு நாடுகள் அங்கம் வகிக்கும் நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைய முயன்றதால் தங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கருதிய ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த தொடங்கியது.
இந்த போரில் உக்ரைனுக்கு ஐரோப்பிய யூனியன் நாடுகளும், அமெரிக்காவும் ராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கி வருகிறது. சீனா, வட கொரியா உள்ளிட்ட நாடுகள் ரஷியாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.