வழிபாட்டால் தெளிவு பெறும் துலா ராசியினர் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 hours ago
வழிபாட்டால் தெளிவு பெறும் துலா ராசியினர் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: கோயில் வழிபட்டால் நன்மைகள் காணும் நாள். முயற்சியில் கூடுதல் கவனம் தேவைப்படும். பரணி: முயற்சி வெற்றியாகும் நாள். வருமானத்தில் இருந்த தடைகள் விலகும். கார்த்திகை 1: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: போராடி வெற்றிபெற வேண்டிய நாள். கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். ரோகிணி: உழைப்பால் உயர்வு காணும் நாள். அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். மிருகசீரிடம் 1,2: முன்னேற்றமான நாள். வருமானத்திற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: நினைப்பது நிறைவேறும் நாள். மனதில் இருந்த குழப்பம் விலகும். உங்கள் செயல் லாபமாகும். திருவாதிரை: குழப்பமின்றி செயல்பட வேண்டிய நாள். பணிபுரியும் இடத்தில் கூடுதல் கவனம் தேவைப்படும். புனர்பூசம் 1,2,3: சங்கடங்கள் விலகும் நாள். திட்டமிட்டு செயல்படுவீர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

கடகம்

புனர்பூசம் 4: சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். பூசம்: கவனமாக செயல்பட வேண்டிய நாள். வழக்கமான செயல்கள் நடந்தேறும். பண நெருக்கடிக்கு ஆளாவீர்.ஆயில்யம்: வரவு செலவில் கவனம் செல்லும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட இடைவெளி நீங்கும்.

சிம்மம்

மகம்: வியாபாரத்தில் கவனம் செலுத்தவும். பிறரை நம்பி இன்று எந்த ஒரு வேலையிலும் ஈடுபட வேண்டாம்.பூரம்: திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர். வேலையில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும்.உத்திரம் 1: நெருக்கடிக்கு ஆளாகும் நாள். அந்நியரால் சில சங்கடங்கள் தோன்றும்.

கன்னி

உத்திரம் 2,3,4: தடைகளை சந்திக்கும் நாள். வியாபாரத்தை விரிவு செய்வது பற்றி சிந்திப்பீர்.அஸ்தம்: வியாபாரத்தில் இருந்த பிரச்னைகளை சரி செய்வீர். கடன்களை அடைப்பீர்.சித்திரை 1,2: யோகமான நாள். உங்கள் அணுகுமுறையால் முயற்சி ஒன்று வெற்றியாகும்.

துலாம்

சித்திரை 3,4: வழிபாட்டால் தெளிவு பெறும் நாள். தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்கள். சுவாதி: தேவையில்லாதவற்றை மனதில் போட்டு குழப்பமடைவீர். அமைதி காக்க வேண்டிய நாள். விசாகம் 1,2,3: முயற்சிகளை நிறைவேற்றிக் கொள்ள வேகமாக செயல்படுவீர். வரவு அதிகரிக்கும்.

விருச்சிகம்

விசாகம் 4: போராடி வெற்றி பெறும் நாள். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். விற்பனை அதிகரிக்கும்.அனுஷம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நன்மையாகும்.கேட்டை: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.

தனுசு

மூலம்: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். உங்களது முயற்சியில் கவனம் செலுத்துவது நன்மையாகும்.பூராடம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். விட்டுக்கொடுத்து செயல்படுவீர்கள். உத்திராடம் 1: பணியிடத்தில் பிறரை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். கூட்டுத்தொழில் லாபம் தரும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: வழிபாட்டால் உங்கள் முயற்சி நிறைவேறும். உடல் நிலை சீராகும்..திருவோணம்: கேள்விக்குறியாகவே இருந்த முயற்சி இன்று நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.அவிட்டம் 1,2: அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும் நாள். துணிச்சலுடன் செயல்படுவீர்கள்.

கும்பம்

அவிட்டம் 3,4: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். சதயம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உங்களுக்குப் பிடிக்காத செயல்களை உடனிருப்பவர் செய்வர்.பூரட்டாதி 1,2,3: நன்மையான நாள். உங்கள் முயற்சியில் எதிர்பார்த்த நன்மை உண்டாகும்.

மீனம்

பூரட்டாதி 4: மகிழ்ச்சியான நாள். குடும்பத்தினரின் தேவையை நிறைவேற்றுவீர்கள். உத்திரட்டாதி: நெருக்கடியான நாள். பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத பிரச்னைகளை சந்திப்பீர்.ரேவதி: செயல்கள் சாதகமாகும் நாள். மகிழ்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த தகவல் வரும்.