மூடி மறைக்கப்பட்ட ஈஸ்ட்டர் தாக்குதல் வழங்கு: பல மர்மங்களை அம்பலப்படுத்திய ஷானி அபேசேகர!
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) முன்னாள் பணிப்பாளரான ஓய்வுபெற்ற சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (SDIG) ஷானி அபேசேகர, 2019 ஏப்ரல் 21 தாக்குதலைச் சுற்றியுள்ள நிகழ்வுகள் பற்றிய விரிவான விவரத்தை அளித்துள்ளார், இது ஒரு திட்டமிட்ட குற்றம் என்று வலியுறுத்தினார்.
விசாரணைகளின் முக்கிய தருணங்களின் போது இராணுவபுலனாய்வாளர்கள் சிஐடியினரை தவறாக வழிநடத்தினார்கள் என தெரிவித்துள்ள அவர் புலனாய்வு அமைப்புகளிற்கும் தாக்குதல்களை மேற்கொண்டவர்களிற்கும் இடையில் நிதி தொடர்புகள் காணப்பட்டிருக்கலாம் என பாரதூரமான கரிசனையை வெளியிட்டுள்ளார்.
ஊடகவியாளர் சுனந்த தேசப்பிரிய எழுதிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தீர்க்கப்படாத மர்மங்கள் என்ற புலனாய்வு நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்தத் தாக்குதல் தனித்து நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல இதில் சதித்திட்டத்துடன் கூடிய முன்னரான சம்பவங்களுடன் தொடர்புடைய திட்டமிட்ட வகையில் நடத்தப்பட்ட தாக்குதல் என்பதை உறுதியாக கூற முடியும் ஒரு தரப்பினரின் தேவைக்கமையே இது நடந்தது என்பது உறுதிப்படுத்தப்பட்ட சாட்சியங்கள் ஊடாக தெரிய வருகிறது இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள்ள தரப்பினர்களிடமிருந்து பல விடயங்கள் விழிப்புணர்ந்துள்ளன அந்த அமைப்பு சதி எவ்வாறு நடந்தது என்பது தொடர்பில் தகவல் வந்துள்ளது.
எனினும் அந்த விடயங்களை ஒன்றுடன் ஒன்று தொடர்படுத்துவது குறித்து தொடர்ந்து விசாரணைகளை நடத்த வேண்டியுள்ளது மௌலானா என்பவர் தொடர்பில் தகவல் வெளியானது. அவர் அவரது கருத்துக்கள் தொடர்பில் மிகவும் ஆழமாக விசாரணை நடத்த வேண்டும் அது தொடர்பில் இதுவரை விசாரணைகள் ஆரம்பிக்கப்படவில்லை என நான் நினைக்கின்றேன் அதில் உள்ள ஒரு முக்கிய விடயம் தொடர்பாக மாத்திரம் நான் கூறுகின்றேன்.
இதனுடன் தொடர்பற்ற ஒருவர் தொடர்பில் அவருக்கு கூறுகின்றார் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு தாஜ் முத்திரரா ஹோட்டலில் எவ்வளவு ஒருவர் இருக்கின்றார் அவரை வெளியில் எடுக்குமாறு கூறியுள்ளார் நான் மட்டக்களப்பில் இருக்கின்றேன். என்னால் அதனை செய்ய முடியாது என அவருக்கு கூறியுள்ளனர் ஹோட்டலில் வெடிக்கச் சென்ற ஜமீல் என்பவர் தொலைபேசியில் உரையாடுவதை காண முடிகிறது அதனை சிசிடிவியில் காணமுடிகிறது அந்த அழைப்பு வந்து சில செக்கன்களில் அவர் அந்த பையை எடுத்துக் கொண்டு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இருந்து வெளியேறினார்.
அதன் பின்னரே அருகில் உள்ள டிராபிக்கல் இன் என்ற விடுதிக்கு அவர் செல்கிறார் அவர் அங்கு ஒரு அறையை வாடகைக்கு பெற்று அந்த அறையில் தனது பையை வைத்துவிட்டு அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு சென்றார் இதன் போது ஏற்படுகின்ற சந்தேகத்தின் பேரில் பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு சென்றபோது இவர் தொடர்பில் சந்தேகம் எழுவதாக மக்கள் கூறினர் அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட போது நான் மனைவியுடன் ஏற்பட்ட சச்சரவு காரணமாக வந்ததாக தமிழில் கூறினார்.
வேண்டுமென்றால் மனைவியின் தொலைபேசி இலக்கத்தை தருகிறேன் அவரிடம் கேளுங்கள் என கூறியுள்ளார் அவரது மனைவியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது வாய் தர்க்கம் ஏற்பட்டு அவர் வெளியேறினார். எங்கு சென்றார் என தெரியாது என பதிலளித்திருந்தார் புலனாய்வு பிரிவினர் அவர் வீட்டில் இருப்பதாக எண்ணி தேடுகின்றார்கள்.
உமர் கர்தார் என்பது அவரது மனைவி பெயர் உமர் கர்த்தாவின் தொலைபேசிக்கு பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்பினை ஏற்படுத்தினார். விபரங்களை கேட்டு அறிந்தனர் பரிசோதனைக்கு உட்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் அங்கிருந்து வெளியேறினார் அவர் அங்கிருந்து வெளியேறியதன் பின்னர் சுமார் பத்து நிமிடங்களில் மீண்டும் மனைவி தொலைபேசியில் தொடர்பு கொள்கின்றார் அவரை அங்கே வைத்துக் கொள்ளுங்கள் நான் வருகிறேன் என கூறியுள்ளார்.
வவுணதீவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட இடத்தில் விசாரணைகளை நடத்துவதற்கு நான் ஒரு குழுவினரை அனுப்பினேன் நீண்ட விசாரணைகள் நடைபெற்றது 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மூன்றாம் திகதி அரசு புலனாய்வு பிரிவின் பிரதி போலீஸ் மா அதிபரின் தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தினார்.
இந்த கொலைக்காக பயன்படுத்தப்பட்ட ஜாக்கெட் கொண்டு கண்டுபிடிக்கப்பட்டது அது தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும் என கூறினார் குற்றச்செயல் இடம் பெற்ற இடத்தை தவிர்த்து வேறு ஒரு இடத்திற்கு செல்வதற்காக அதனை செய்துள்ளார் வாவுனத்தீவு போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி கைது செய்த அஜந்தன் என்பவரின் வீட்டுக்கு மோப்ப நாய் சென்றது.
இந்த சம்பவம் இடம்பெற்ற நாள் நவம்பர் மாதம் 30 ஆம் தேதி டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி ஆகும் போது 72 மணித்தியாலங்கள் கடந்துள்ளன ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி கபூர் மாமா கைது செய்யப்பட்டதை அடுத்து சக்ரான் தலைமையிலான தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பை இதற்கு பொறுப்பு கூறவேண்டும் என்று விஷயம் தெரிய வந்தது ஏன் புலனாய்வு பிரிவினர் இத்தகைய தகவல்களை வழங்கி விசாரணைகளை திசை திருப்பினார்கள் என்பது பாரிய பிரச்சினை ஆகும்