க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை தொடர்பில் வெளியான மற்றுமொரு அறிவிப்பு!
2025 ஆம் ஆண்டு வீட்டுப் பொருளாதாரம் பாடத்திற்கான நடைமுறைத் பரீட்சை தொடர்பான சிறப்பு அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அறிவிப்பின்படி, நடைமுறை பரீட்சை ஜனவரி 24, 2026 முதல் பிப்ரவரி 2, 2026 வரை நாடளாவிய ரீதியாக நிறுவப்பட்ட 42 பரீட்சை நிலையங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கான நுழைவுச் சீட்டுகள் அந்தந்த பாடசாலை அதிர்பர்களுக்குஅனுப்பப்பட்டுள்ளதாகவும், தனியார் விண்ணப்பதாரர்களுக்கான நுழைவுச் சீட்டுகள் அவர்களின் விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிகளுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், தபால் மூலம் அனுமதி அட்டைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள், ஜனவரி 19, 2026 முதல் இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் அனுமதி அட்டைகளைப் பதிவிறக்கம் செய்வதற்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வு தொடர்பான விசாரணைகளை பின்வரும் தொடர்பு வழிகள் மூலம் மேற்கொள்ளலாம் என்று பரீட்சைத் திணைக்களம் மேலும் தெரிவிக்கிறது:
• ஹாட்லைன்: 1911
• தொலைபேசி: 011 2784208 / 011 2784537
• தொலைநகல்: 011 2784422
• மின்னஞ்சல்: gcealexam@gmail.com
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்