சவுதி அரேபியாவில் ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை

#Arrest #Prison #government #SaudiArabia #Teacher
Prasu
1 month ago
சவுதி அரேபியாவில் ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை

சவுதி அரேபிய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்ததற்காக ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து சவுதி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

முகமது அல் காம்தி என்பவர் சவுதி அரேபியாவில் ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் எக்ஸ் தளப்பக்கத்தில் வெறும் 9 பாலோயர்களைக் கொண்டுள்ளார். 

அதில் அரசுக்கு எதிராக கருத்து பதிவிட்டு வந்தார். இதனால் கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். 

அதன்பிறகு ஜூலை 2023-ம் ஆண்டு அவருக்கு சிறப்பு குற்றவியல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டது. தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். 

அதனை விசாரித்த கோர்ட், கடந்த ஆகஸ்ட் மாதம், மரண தண்டனையை ரத்து செய்ததது. இதனை தொடர்ந்து, ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து சவுதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 இதனிடையே, இணையத்தில் இதே போன்ற விமர்சனங்களுக்காக காம்தியின் சகோதரர் ஆசாத் அல்-காம்டிக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆசாத்தின் தண்டனை மறுபரிசீலனை செய்யப்படுமா என்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!