மிதுன ராசியினருக்கு வரவால் வளம் காணும் நாள் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
3 hours ago
மிதுன ராசியினருக்கு வரவால் வளம் காணும் நாள் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: நன்மையான நாள். அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் விருப்பங்கள் நிறைவேறும். பரணி: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். புதிய முயற்சிகளை இன்று ஒத்தி வைப்பது நன்மையாகும். கார்த்திகை 1: சாதுர்யமாக செயல்பட்டு சாதனை புரியும் நாள். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நினைப்பது நிறைவேறும். முயற்சியில் வெற்றியடைவீர். அந்நியரால் ஆதாயம் அதிகரிக்கும். ரோகிணி: முயற்சியால் முன்னேற்றம் காண வேண்டிய நாள். பணிபுரியும் இடத்தில் வேலைபளு அதிகரிக்கும். மிருகசீரிடம் 1,2: யோகமான நாள். உங்கள் செயல்களுக்கு தடையாக இருந்தவர்கள் விலகிச்செல்வர்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: வரவால் வளம் காணும் நாள். பிறரிடம் பேசும்போது வார்த்தைகளில் கவனம் தேவை. திருவாதிரை: வழிபாட்டால் ஏற்றம் காணும் நாள். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும்.புனர்பூசம் 1,2,3: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வருவாய் வரும்.

கடகம்

புனர்பூசம் 4: குழப்பத்திற்கு இடம் கொடுக்காமல் செயல்பட வேண்டிய நாள். செயல்களில் கவனம் தேவை.பூசம்: இழுபறியாக இருந்த பிரச்னையில் தீர்வு காண்பீர். நட்பு வட்டம் விரிவடையும். ஆயில்யம்: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். மனதில் தேவையற்ற சிந்தனை மேலோங்கும். 

சிம்மம்

மகம்: வரவு செலவில் கவனம் செலுத்த வேண்டிய நாள். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும்.பூரம்: அலைச்சல் அதிகரிக்கும். திடீர் செலவுகள் தோன்றும். சிந்தித்து செயல்பட சங்கடங்கள் குறையும்.உத்திரம் 1: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பெரியோர் ஆலோசனை நன்மைதரும்.

கன்னி

உத்திரம் 2,3,4: வியாபாரத்தில் உங்கள் முயற்சி வெற்றியாகும். பெரியோர் ஆதரவால் நீண்டநாள் பிரச்னை தீரும்.அஸ்தம்: உங்கள் நம்பிக்கை வெற்றியாகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.சித்திரை 1,2: வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வரவேண்டிய பணம் வசூலாகும். 

துலாம்

சித்திரை 3,4: தொழிலில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகும் நாள். உங்களுக்கேற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர்.சுவாதி: சிந்தித்து செயல்படுவீர். வருமானத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.விசாகம் 1,2,3: தொழிலில் இருந்த போட்டி விலகும். உங்கள் அறிவாற்றலால் நினைத்ததை அடைவீர். 

விருச்சிகம்

விசாகம் 4: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள். தந்தைவழி உறவால் உங்கள் வேலை முடியும். அனுஷம்: தடைபட்டிருந்த வேலைகள் நடந்தேறும். குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். கேட்டை: பிறரை நம்பி நீங்கள் ஈடுபடும் வேலையில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

தனுசு

மூலம்: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சி இன்று இழுபறியாகும். நெருக்கடி அதிகரிக்கும்.பூராடம்: பண நெருக்கடியால் சங்கடம் தோன்றும். இயந்திரப் பணியில் எச்சரிக்கை அவசியம்.உத்திராடம் 1: வெளியூர் பயணத்தில் எதிர்பாராத சங்கடம் தோன்றும். தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும். 

மகரம்

உத்திராடம் 2,3,4: மகிழ்ச்சியான நாள். பணத்தேவை பூர்த்தியாகும். குடும்ப நலனில் ஆர்வம் காட்டுவீர்கள். திருவோணம்: வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மைதரும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும்.அவிட்டம் 1,2: நண்பர்களால் உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். நீங்கள் நினைப்பது நடந்தேறும். 

கும்பம்

அவிட்டம் 3,4: நினைப்பதை சாதிக்கும் நாள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.சதயம்: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். உற்சாகத்துடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர்.பூரட்டாதி 1,2,3: உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வர். திட்டமிட்டிருந்த வேலைகள் நடந்தேறும். 

மீனம்

பூரட்டாதி 4: கடவுள் அருளால் முன்னேற்றம் காணும் நாள். பெரியோர் கூறும் ஆலோசனையை ஏற்பீர்கள். உத்திரட்டாதி: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னையை சரி செய்வீர். தடைப்பட்டிருந்த வேலைகள் நடந்தேறும்.ரேவதி: பிள்ளைகள் நலனில் அக்கறை உண்டாகும். பூர்வீக சொத்து விவகாரம் முடிவிற்கு வரும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!