இளம் சுவிஸ் விளையாட்டு வீராங்கனை உயிரிழப்பு

#Death #Switzerland #Hospital #Player
Prasu
1 hour ago
இளம் சுவிஸ் விளையாட்டு வீராங்கனை உயிரிழப்பு

சுவிட்சர்லாந்தில், விபத்தொன்றில் படுகாயமடைந்த இளம் சைக்கிள் பந்தய வீராங்கனை உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுவிஸ் சைக்கிள் பந்தய வீராங்கனையான மியூரியல் (Muriel Furrer, 18), சூரிச்சில் சைக்கிள் பந்தயம் ஒன்றில் பங்கேற்றிருந்த நிலையில், மரங்கள் அடர்ந்த ஒரு பகுதியில் விபத்தொன்றை சந்தித்தார்.

அந்த இடம் ஈரமாக இருந்துள்ளதால் இந்த விபத்து நேர்ந்துள்ளது. என்றாலும், என்ன நடந்தது என்பதைக் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

தலையில் பலத்த காயமடைந்த மியூரியல் ஹெலிகொப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சூரிச் பல்கலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மியூரியல், மரணமடைந்துவிட்டதாக சைக்கிள் பந்தய அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

 பிரகாசமான எதிர்காலம் உள்ளது என கருதப்பட்ட ஒரு இளம் சைக்கிள் பந்தய வீராங்கனையின் வாழ்வு, 18 வயதிலேயே முடிந்துபோன விடயம் பெரும் கவலையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!