இந்திய வரலாற்றில் மிக இளம் வயதில் விடுதலைக்கு போராடி இறந்த பகத்சிங்
இந்திய வரலாற்றில் மிக இளம் வயதிலே விடுதலைக்கு போராடி இறந்தவர் வரிசையில் அந்த மாவீரன் பிருத்விராஜ் சவுகான் முதல் சிவாஜியின் மகன் சாம்பாஜி முதல் மதன்லால் திங்காரா, குதிராம் போஸ் வரை பெரும் வரிசை உண்டு அந்த வரிசையில் 23ம் வயதிலே இணைந்தவன் அந்த பகத்சிங்.
1919ம் ஆண்டு நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த பின்னால் 12 வயது சிறுவனாக, இரத்தம் சிந்தியமண்ணை எடுத்து தனது ஆடையில் முடிந்துகொண்டு போராட புறப்பட்ட ஒரு இளைஞன் அவன் அமைதியான முறையில் போராடி கொண்டிருந்த பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதிராயின் படுகொலை அவனை போராளியாக்கி கொலைகுற்றவாளி ஆக்கிற்று.
லாலா லஜபதிராயினை அடித்து கொன்றவன் பிரிட்டிஷ் அதிகாரி சாண்டர்ஸ், அந்த சாண்டர்ஸ் பின் சுட்டு கொல்லப்பட்டான் அந்த கொலையில் பகத்சிங் தேடப்படும் குற்றவாளி என அறிவிக்கவும் பட்டவன் அவன் சாண்டர்ஸின் கொலையில் தேடப்படும் பொழுதே ஆட்சியாளர் மன்றத்தில் ஒரு சட்டத்தை கண்டித்து குண்டுவீசி, அதன் நியாயத்தை அமைதியாக வெளிகாட்டிய போராளி.
அக்குண்டுவீச்சில் யாரும் கொல்லப்படவில்லை எனினும், இவரால் ஏற்பட்ட எழுச்சியினை கண்டு பயந்த அரசாங்கம் அவரை கொல்ல இது பெரும் வாய்ப்பாக கருதிற்று, தூக்கு தண்டனை விதித்தது. அந்த பகத்சிங்கின் உறுதி ஆச்சரியமானது, அவ்வழக்கில் சம்பவம் நடந்த அன்று பகத்சிங் ஊரில் இல்லை, அதை நீதிமன்றத்தில் நிரூபித்து மகனை மீட்க அவரின் தந்தை படாதபாடுபட்டார்
ஆனால் பகத்சிங் உறுதியாக சொன்னான், "இந்த வழக்கு இல்லையென்றாலும் இன்னொரு வழக்கு நிச்சயம் எதிர்காலத்தில் பாயும், என் வழி இத்தேசத்தின் விடுதலைக்கு அப்படியானது, அதனால் நான் அதை எதிர்கொள்வதே சரி, என் வழியில் என்னை விட்டுவிடுங்கள்.." பகத்சிங் ஏன் வரலாற்றில் நிற்கின்றான் என்றால் இதற்காகத்தான்.
ஆசிரமம்,சத்தியாகிரகம், ஆன்மீக சோதனை இன்னும் என்னவெல்லாமோ செய்துகொண்டிருந்த காந்தி, பகத்சிங்கினை காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. வன்முறைக்கு நான் எதிரி என சொல்லிவிட்டு "ரகுபதிராகவ ராஜாராம்" என பாட சென்றுவிட்டார் காந்தி, அப்படியானால் லாலா லஜபதிராய் தானே தலையில் அடித்து செத்துவிட்டாரா என கேட்டால் அமைதியாக ஆட்டுப்பால் குடித்துகொண்டிருந்தார்.
வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது என சொன்னார் காந்தி, பகத்சிங்கினை அவர் ஆதரிக்கவில்லை. அதே நேரம் பகத்சிங்கிற்கும் நாட்டுக்காக சாவதில் தயக்கமேதுமில்லை. 24 வயதில் சர்ச்சைக்குள்ளான முறையில் தூக்கிலபட்டதாக அறிவிக்கப்பட்ட பகத்சிங்கின் மரணம் மிகுந்த சர்ச்சைக்குள்ளானது, அதில் மறைக்கப்பட்ட பல விஷயங்கள் உண்டு.
ஆம் தூக்கு என நாம் சொன்னாலும், சாண்டர்ஸின் குடும்பமே சிறையில் வந்து அவனை அடித்து கொன்றது என்ற இன்னொரு சர்ச்சை உண்டு அவனின் மரணம் லாகூர் முதல் கன்னியாகுமரி வரை பெரும் எழுச்சியினை கொடுத்தது, அவனுக்காக கை குழந்தையோடு இந்திய மகளிர் தெருவுக்கு வந்து அஞ்சலி செலுத்தியது அன்று பிரிட்டனை அலற செய்தது பெரும் எழுச்சியினை இங்கு கொடுத்துவிட்டுத்தான் மறைந்தான் பகத்சிங், அது மறுக்கமுடியாத வரலாறு குறுகிய காலம் வாழ்ந்தாலும் மாபெரும் எழுச்சியினை அவரின் மரணம் தோற்றுவித்து அடுத்த 15 ஆண்டுகளில் விடுதலை கொடுக்கும் அளவிற்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மாற்றம் கொண்டுவந்தது.
ஒரு வகையில் பகத்சிங் அதிர்ஷ்டசாலி, அவன் விரும்பிய சுதந்திரத்தினை காணாவிட்டாலும், அவனால் தாங்கமுடியாத இந்திய பிரிவினையும்,அதுவும் சொந்த பஞ்சாப் 3 துண்டாக உடைக்கப்பட்ட கொடுமையும் காண அவன் இல்லை. அன்று சாண்டர்ஸ் கொல்லப்பட்ட பொழுது மொத்த இந்தியாவும் ஆர்ப்பரித்தது, பகத்சிங் தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பொழுது டல்லி,மும்பை,கல்கத்தா,சென்னை, லாகூர், கராச்சி என மொத்த இந்தியாவும் கதறியது.
இன்று அவன் போராடிய லாகூரில் இருந்து பல ஏவுகனைகள் அணுகுண்டோடு இன்று டெல்லியையும்,மும்பையும் குறிபார்த்து நிற்கிறது. காந்தியும் நேருவும் தேசத்தை பிரித்து கொடுத்ததால் வந்த பெரும் துரதிருஷ்டம் இது அவனுக்காக பாரதியோடும், வ.உ.சிதம்பரத்தோடும் அழுத தமிழகத்தின் கடற்கரையில் இந்திய கப்பல்களால் லாகூரும்,கராச்சியும் 24 மணிநேரமும் குறிவைக்கபடுகிறது.
பக்த்சிங் இருந்திருந்தால் இதையெல்லாம் அனுமதித்திருக்கமாட்டான், அதனாலேதான் அவன் தூக்கிலிடப்பட்ட போது கூட காந்தியிடமிருந்து ஒரு வார்த்தை வராமல் இருந்திருக்கலாம் அவன் பிறந்த இடம் பாகிஸ்தானின் பஞ்சாபுக்கு சென்றுவிட்டது இதை சீரமைக்க இந்தியா சொல்லிவருகின்றது, இந்தியா சொன்ன ஒரே காரணத்துக்காக பாகிஸ்தான் செய்யாமல் இருக்கின்றது இன்று அந்த மாவீரனின் பிறந்தநாள், அவன் பிறந்த லாகூர் இந்தியாவில் இல்லாமல் இருக்கலாம்.
ஆனால் அவன் நினைவுகளை இத்தேசம் ஒருநாளும் மறக்காது, இந்திய மண்ணோடும் , காற்றோடும் கலந்தவன் அவன் அவனுக்கு வீர வணக்கம் காந்தியும் நேருவும் எப்படிப்பட்ட அரசியலை செய்தார்கள், போராட்டம் என தலைமையேற்று இந்தியரின் உணர்ச்சியினை அடக்கினார்கள் என்பதற்கு பகத்சிங் பெரும் சாட்சி நேதாஜிக்கு முன்பே பலருக்கு பல துரோகங்களை காந்தி செய்தார்.
பகத்சிங்குக்கு அவர் கொடுத்த வலி மிக பெரிது சுதந்திரம் அடைந்தபின்பும் காந்தியும் நேருவும் அல்லது காங்கிரசும் பகத்சிங் எனும் தேசாபிமான வீரனுக்கு என்ன செய்தார்கள் என்றால் ஒன்றுமில்லை அந்த பகத்சிங்கினை பெருமை படுத்தும் விதமாக மோடி சண்டிகர் விமான நிலையத்துக்கு பகத்சிங் பெயரை சூட்டி அறிவிப்பை வெளியிட்டார்.
ஆம், நேருவும் காங்கிரசும் செய்யாததை சீக்கியரான மன்மோகன் சிங் செய்யாததை மோடிதான் செய்தார்
அதே மோடி திருச்சி விமான நிலையத்துக்கு மருதுபாண்டியர் பெயரையும், மதுரை விமானநிலையத்துக்கு பசும்பொன் தேவர் பெருமகனார் பெயரையும் சூட்டுவார் என எதிர்பார்க்கின்றது தேசம்.
மாவீரன் பகசிங் எனும் தேச தீபந்தத்துக்கு வீரவணக்கம்