நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கி 39 பேர் மரணம்
நேபாளத்தில் இடைவிடாத மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேபாளத்தின் சில பகுதிகள் நேற்று பெய்த கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக பேரிடர் அதிகாரிகள் எச்சரித்தளனர்.
இந்நிலையில், வெள்ளப்பெருக்கில் சிக்கி 39 பேர் இறந்துள்ளனர். இதில், காத்மாண்டுவில் 9 பேரும், லலித்பூரில் 16 பேரும், பக்தபூரில் 5 பேரும், கவ்ரேபாலன்சௌக்கில் 3 பேரும், பஞ்ச்தார் மற்றும் தன்குடாவில் தலா இரண்டு பேரும், ஜாபா மற்றும் தாடிங்கில் இருந்து தலா ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெள்ளத்தில் சிக்கி 11 பேர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.
காத்மாண்டுவில் 226 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேபாள காவல்துறையில் இருந்து சுமார் 3,000 பாதுகாப்புப் பணியாளர்களைக் கொண்ட மீட்புக் குழு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.