இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் உயிரிழப்பு

#Death #Attack #Missile #Israel #Hezbollah #Chief
Prasu
1 month ago
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் உயிரிழப்பு

லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறிவைத்து கடந்த வாரம் முதல் இஸ்ரேல் தாக்குதல் நடந்தி வருகிறது. 

ஹிஸ்புல்லாவினரின் பேஜர்கள், வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட தொலைத்தொடர்பு சாதனங்கள் வெடித்துச் சிதறியதில் லெபனான் பொதுமக்கள் உட்பட சுமார் 3000 பேர் படுகாயமடைந்தனர், இரு குழந்தைகள் உட்பட 37 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து லெபனானில் ஹிஸ்புல்லா நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை முன்னெடுத்தது. இதில் ஹிஸ்புல்லா கமாண்டர்கள் சிலர் கொள்ளப்பட்டனர். 

இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் ஒரே வாரத்தில் லெபனானில் 700 க்கும் மேற்பட்டோர் உயிழந்தனர். 118,000 க்கும் அதிகாமாக லெபனான் மக்கள் போர் பதற்றத்தால் தங்களின் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு பகுதியில் உள்ள தாஹியே [Dahiyeh] பகுதியில் அமைத்துள்ள ஹிஸ்புல்லா தலைமை அலுவலகம் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள குடியிருப்பு குடியிருப்பு கட்டடங்கள் மீதும் இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியது. 

ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா [64 வயது] உள்ளிட்டோரைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. 

 இந்நிலையில் இந்த வான்வழித் தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இரவு முதல் நஸ்ரல்லா காணாமல் போன நிலையில் ஹிஸ்புல்லா தரப்பில் இருந்து இதுவரை குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!