சீனாவில் திடீரென வெடித்த கழிவு நீர் குழாய்

#China #Blast
Prasu
1 hour ago
சீனாவில் திடீரென வெடித்த கழிவு நீர் குழாய்

தெற்கு சீனாவின் நான்னிங் நகரில் கழிவுநீர் குழாய்களை பதிப்பதற்காக பணியாளர்கள் அழுத்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது செப்டிக் டேங்க் குழாய் திடீரென வெடித்துள்ளது. குழாய் வெடித்ததில் 33 அடி உயரத்திற்கு எழுந்த மலக்கழிவுகள் தூக்கி வீசப்பட்டு, சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது படிந்தது.

இந்த கழிவு சாலையில் சென்றுகொண்டிருந்த வாகன ஓட்டிகளை முழுவதுமாக நனைத்தது. அதிர்ஷ்டவசமாக காரில் சென்றவர்கள் மனித கழிவுகளில் நனையாமல் தப்பினர். ஆனால் வேகமாக கழிவுகள் வந்து அடித்ததில் காரின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன. 

இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனையடுத்து அப்பகுதியை சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டது. இச்சம்பவத்தில் சேதமடைந்த காரின் டிரைவர் ஒருவர், எனது கார் மஞ்சள் நிறத்தில் உள்ளது. அது நாற்றம் வீசுகிறது. என்னால் அதை தொடர்ந்து பயன்படுத்த முடியாது என்றார்.

இச்சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!