தனுசு ராசியினருக்கு தெய்வ அனுகூலத்தால் நினைத்ததை சாதிக்கும் நாள் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 hours ago
தனுசு ராசியினருக்கு தெய்வ அனுகூலத்தால் நினைத்ததை சாதிக்கும் நாள் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: குடும்பத்தினர் நலனில் அக்கறை செலுத்தும் நாள். திட்டமிட்டிருந்த செயலில் மாற்றம் செய்வீர். பரணி: தள்ளிப்போன வேலைகள் இன்று நிறைவேறும். நீண்டநாள் பிரச்னைகள் முடிவிற்கு வரும். கார்த்திகை 1: உங்கள் செயல்களால் லாபம் உண்டாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: மகிழ்ச்சியான நாள். உங்கள் முயற்சிக்கு சூழ்நிலை சாதகமாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.ரோகிணி: திட்டமிட்டு செயல்படுவீர். மறைமுகமாக தொல்லை அளித்தவர்கள் விலகுவர்.மிருகசீரிடம் 1,2: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். வருமானத்தில் தோன்றிய தடைகள் விலகும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: முயற்சி வெற்றியாகும் நாள். துணிச்சலுடன் செயல்படுவீர். எதிர்பார்த்த வருமானம் வரும். திருவாதிரை: இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்குவரும். உங்கள் திறமை வெளிப்படும்.புனர்பூசம் 1,2,3: நண்பர்கள் உதவியுடன் நீங்கள் மேற்கொள்ளும் செயல்கள் லாபமாகும். கடன்கள் அடைபடும்.

கடகம்

புனர்பூசம் 4: வருமானத்தால் வளம் காணும் நாள். வியாபாரத்தில் இருந்த தடைகள் விலகும். பூசம்: கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். உறவுகளுக்குள் ஏற்பட்ட பிரச்னை விலகும்.ஆயில்யம்: பணிபுரியும் இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். வேலையில் கவனம் அதிகரிக்கும்.

சிம்மம்

மகம்: குழப்பத்திற்கு ஆளாகும் நாள். வேலையில் நெருக்கடி இருக்கும். தேவையற்ற செலவு தோன்றும்.பூரம்: மனம் குழப்பத்திற்கு ஆளாகும் என்றாலும் நினைத்ததை சாதிப்பீர். எதிர்பார்த்த பணம் வரும். உத்திரம் 1: குடும்பத்தினர் எண்ணத்தைப் புரிந்து செயல்படுவது நன்மையாகும். புதிய முயற்சிகள் வேண்டாம்.

கன்னி

உத்திரம் 2,3,4: அலைச்சலும் செலவும் அதிகரிக்கும் நாள். வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும்.அஸ்தம்: திட்டமிட்டு செயல்பட்டு இழுபறியாக இருந்த ஒரு வேலையை முடிவிற்கு கொண்டு வருவீர்.சித்திரை 1,2: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். காணாமல் போன பொருள் கிடைக்கும்.

துலாம்

சித்திரை 3,4: உற்சாகத்துடன் செயல்படுவீர். பிறரை அனுசரித்துச் செல்வதால் நன்மை அதிகரிக்கும்.சுவாதி: எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். கூட்டுத்தொழிலில் ஆதாயம் அதிகரிக்கும்.விசாகம் 1,2,3: உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

விருச்சிகம்

விசாகம் 4: தொழிலில் முன்னேற்றம் காணும் நாள். துணிச்சலுடன் செயல்படுவீர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.அனுஷம்: போட்டிகளை சமாளித்து நினைத்ததை சாதிப்பீர். வருவாய் அதிகரிக்கும். விருப்பம் நிறைவேறும்.கேட்டை: உங்களின் தனித்திறன் வெளிப்படும். எதிராக செயல்பட்டவர்கள் உங்களை பார்த்து ஆச்சர்யப்படுவர்.

தனுசு

மூலம்: தெய்வ அனுகூலத்தால் நினைத்ததை சாதிக்கும் நாள். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும்.பூராடம்: நேற்றுவரை இருந்த பிரச்னைகள் நீங்கும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும். மனம் மகிழ்ச்சி அடையும்.உத்திராடம் 1: எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரம் முன்னேற்றமடையும். சிலர் வழிபாட்டில் பங்கேற்பீர்.

மகரம்

உத்திராடம் 2,3,4: செயல்களில் தடை ஏற்படும் நாள். வியாபாரம் செய்யும் இடத்தில் எச்சரிக்கை அவசியம்.திருவோணம்: வாகனப் பயணத்தில் நிதானம் வேண்டும். வீண் பிரச்னைகள் இன்று உங்களைத் தேடிவரும்.அவிட்டம் 1,2: கொடுக்கல் வாங்கலில் கூடுதல் கவனம் தேவை. நட்பால் சில பிரச்னை உண்டாகும்.

கும்பம்

அவிட்டம் 3,4: குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனையை ஏற்பீர்கள்.சதயம்: ஆரோக்கியம் சீராகும். உங்கள் செயல்களுக்கு தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வர்.பூரட்டாதி 1,2,3: பணியிடத்தில் உண்டான பிரச்னை தீரும். நண்பர்கள் ஆதரவால் உங்கள் செயல் லாபமாகும்.

மீனம்: 

பூரட்டாதி 4: முன்னேற்றமான நாள். உங்கள் தேவைகள் பூர்த்தியாகும். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.உத்திரட்டாதி: மனம் தெளிவடையும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வர்.ரேவதி: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். இழுபறியாக இருந்த பிரச்னைகள் முடிவிற்கு வரும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!