விண்வெளியில் சிக்கிய வீரர்களை மீட்கும் பணிகள் ஆரம்பம்

#NASA #Space #astronaut
Prasu
1 month ago
விண்வெளியில் சிக்கிய வீரர்களை மீட்கும் பணிகள் ஆரம்பம்

இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (வயது 58) மற்றும் மற்றொரு வீரரான புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த மாதம் 5ந்தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். 

அங்கு அவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் திட்டமிட்டபடி கடந்த மாதம் 22ந்தேதி பூமிக்கு திரும்பி இருக்க வேண்டும். ஆனால் ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஹீலியம் வாயு கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் சிக்கல் உருவானது.

தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்து இவர்கள் பூமி திரும்ப அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களை மீட்பதற்கான விண்கலம் இரவு விண்ணில் ஏவப்பட்டுள்ளது. 

120 நாட்களுக்கும் மேலாக சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை மீட்க எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியை நாசா நாடியது. 

அதன்படி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட டிராகன் கேப்சூல் எனப்படும் விண்கலம் க்ரூ9 இல் இடம்பெற்ற 4 வீரர்களுடன் புளோரிடாவின் விண்வெளி நிலையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. 

இந்த டிராகன் விண்கலன் அடுத்தாண்டு பிப்ரவரியில் தான் பூமிக்கு திரும்பும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!