லெபனான் மீது தரைவழித் தாக்குதல் நடத்த திட்டமிடும் இஸ்ரேல்!
லெபனான் மீது தரைவழித் தாக்குதல் நடத்த உள்ளதாக அமெரிக்காவிடம் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. நேற்று (30) முதல் தாக்குதல்கள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என இஸ்ரேல் அமெரிக்க அதிகாரி ஒருவருக்கு அறிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், இஸ்ரேல் லெபனான்-இஸ்ரேல் எல்லைக்கு டாங்கிகளை அனுப்பியது, லெபனான் மீது தரைவழி தாக்குதல் அபாயத்தை தீவிரப்படுத்தியது.
இந்தப் பின்னணியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஹிஸ்புல்லாஹ்வின் உப தலைவர் ஷேக் நைம் காசிம், இஸ்ரேலிய தரைவழித் தாக்குதலை எதிர்கொள்ள தமது அமைப்பு தயாராக இருப்பதாக வலியுறுத்தினார்.
இதேவேளை, லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் சைட் ஹசன் நஸ்ரல்லாஹ் கடந்த வார இறுதியில் இஸ்ரேலிய வான் தாக்குதலில் கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட ஹிஸ்புல்லாஹ் தலைவரின் சடலம் லெபனான் சுகாதார பிரிவின் இடிபாடுகளுக்கு மத்தியில் நேற்று (29) கண்டெடுக்கப்பட்டது.
அவரது உடல் தகனம் செய்யப்படும் திகதிஇன்னும் வெளியிடப்படவில்லை.
லெபனானில் உள்ள இலக்குகளை தாக்குவதை இஸ்ரேல் இன்னும் நிறுத்தவில்லை, நேற்று நடந்த தாக்குதலில் 105 பேர் கொல்லப்பட்டனர்.