ஈரான் மக்களுக்கு ஆதரவளிக்கும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு

#Prime Minister #people #Israel #Iran #Netanyahu
Prasu
1 month ago
ஈரான் மக்களுக்கு ஆதரவளிக்கும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு

ஹிஸ்புல்லா இயக்கத் தலைவர் கொல்லப்பட்டதை யடுத்து இஸ்ரேலை பழித் தீர்ப்போம் என்று ஈரான் தெரிவித்தது. 

இந்த நிலையில் ஈரான் அரசுக்கு இஸ்ரேல் பிரதமர் நேதன் யாகு நேரடி எச்சரிக்கை விடுத்தும், ஈரான் மக்களுக்கு ஆதரவாக தெரிவித்தும் உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் கூறியதாவது:- இஸ்ரேல் உங்களுடன் நிற்கிறது என்பதை ஈரான் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும், உங்களை அடி பணியச் செய்யும் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.

ஈரான் அரசு தனது சொந்த மக்களின் நலன்களை விட பிராந்திய மோதல்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. அந்த அரசு ஈரானை ஆழமான இருளிலும் ஆழமான போரிலும் ஆழ்த்துகிறது.

இந்த ஆட்சி உங்களை படுகுழிக்கு நெருக்கமாக கொண்டு வருகிறது. பெரும் பாலான ஈரானியர்களுக்கு இந்த அரசாங்கம் தங்களைப் பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை என்பது தெரியும்.

உங்களைப் பற்றி அக்கறை கொண்டிருந்தால் மத்திய கிழக்கு முழுவதும் வீணான போர்களுக்காக பில்லியன் கணக்கான டாலர்களை வீணாக்குவதை நிறுத்திவிடும். உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தத் தொடங்கும்.

அணு ஆயுதங்கள் மற்றும் வெளிநாட்டுப் போர்களுக்காக விரயமாக்கப்பட்ட பணம் அனைத்தும் உங்கள் குழந்தைகளின் கல்விக்காகவும், உங்கள் உடல்நலத்தை மேம்படுத்துவதற்காகவும், நாட்டின் உள்கட்டமைப்பு, தண்ணீர், கழிவுநீர் மற்றும் உங்களுக்குத் தேவையான மற்ற எல்லா விஷயங்களிலும் முதலீடு செய்யப்பட்டதா என்று கற்பனை செய்து பாருங்கள்.

ஈரான் சுதந்திரமாக இருக்கும் காலம், மக்கள் நினைக்கும் அந்த தருணம் மிக விரைவில் வரும். யூத மக்கள்-பாரசீக மக்கள் இறுதியாக சமாதானமாக இருப்பார்கள். நமது இரு நாடுகளான இஸ்ரேல் மற்றும் ஈரான் சமாதானமாக இருக்கும்.

 ஹமாஸ் மற்றும் ஹிஸ் புல்லாவை நீங்கள் ஆதரிக்கவில்லை என்று எனக்குத் தெரியும். ஆனால் உங்கள் தலைவர்கள் ஆதரிக்கிறார்கள். உங்களுடன் இஸ்ரேல் துணையாக நிற்கிறது என்றார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!