அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை தாக்கிய ஹெலன் சூறாவளி

#Death #America #Strom #Florida
Prasu
3 hours ago
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை தாக்கிய ஹெலன் சூறாவளி

அமெரிக்காவை கடுமையாக தாக்கிய ஹெலன் சூறாவளி புயல் கரையை கடந்துள்ளபோதிலும், கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 116 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தெரவிக்கப்படுகிறது.

ஹெலன் சூறாவளி புயல் கடந்த 26.09.2024 அன்று வலுவடைய ஆரம்பித்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. எனினும் தற்போது புயல் புளோரிடா பகுதியில் தாழ்வு நிலை அடைந்து கரையை கடந்த போதிலும் வெள்ளநிலைமை குறையவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதி மற்றும் புளோரிடா மாகாணம் முழுவதும் புயலானது பாரிய அளவில் அழிவை ஏற்படுத்தி சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

சூறாவளியால் மணிக்கு 225 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசியது என்றும் இதனால், பல வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், ஜார்ஜியா மாகாணத்தில் பலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

 இந்த பகுதிகளில் வசித்து வரும் குடியிருப்பாளர்களில் 20 இட்சம் பேர் மின்சார வசதியின்றி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!