சிங்கப்பூர் குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணைய அதிகாரிக்கு இரண்டு வாரச் சிறைத் தண்டனை

#Arrest #government #Singapore #officer
Prasu
1 month ago
சிங்கப்பூர் குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணைய அதிகாரிக்கு இரண்டு வாரச் சிறைத் தண்டனை

பற்றுச்சீட்டுகளைக் கையாடல் செய்த குற்றத்துக்காக குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணைய அதிகாரி ஒருவருக்கு இரண்டு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

லிங் யோங் ஷெங், 36, எனப்படும் அவர் பிரானி வேயில் உள்ள சீ டொமெய்ன் தலைமையகத்தில் வேலை செய்துகொண்டு இருந்தபோது $440 மதிப்புள்ள 22 பற்றுச்சீட்டுகளைக் கையாடல் செய்தார்.

தம்முடன் வேலை செய்யும் மற்ற அதிகாரிகளுக்குத் தரப்பட வேண்டிய பற்றுச்சீட்டுகள் அவை. தமது வீட்டு முதலாளியின் குழந்தைக்கு பொம்மையும் மின்னிலக்கப் பொருளையும் வாங்க அந்தப் பற்றுச்சீட்டுகளை அவர் பயன்படுத்தினார்.

நம்பிக்கை மோசடி செய்த ஒரு குற்றச்சாட்டை அவர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து தண்டனை அறிவிக்கப்பட்டது.

 முன்னதாக, பற்றுச்சீட்டுகள் திருடப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்திய குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம், சந்தேக நபரை அடையாளம் கண்டதும் காவல்துறையிடம் புகார் செய்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறியது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!