ரிஷப ராசியினருக்கு நன்மையான நாள் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 hours ago
ரிஷப ராசியினருக்கு நன்மையான நாள் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காணும் நாள். பணிச்சுமை அதிகரிக்கும். உடன் வேலை செய்வோர் ஒத்துழைப்பாக இருப்பர்.பரணி: எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். வாய்ப்புகள் தேடிவரும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.கார்த்திகை 1: இழுபறியாக இருந்த முயற்சி வெற்றியாகும். நண்பர்கள் ஆதரவாக இருப்பர். நினைத்தது நிறைவேறும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: நன்மையான நாள். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். செய்து வரும் தொழிலில் லாபம் உண்டாகும். ரோகிணி: குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். எதிர்பார்த்த தகவல் வரும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.மிருகசீரிடம் 1,2: நேற்று வரை இழுபறியாக இருந்த வேலை நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: உழைப்பால் உயர்வு காணும் நாள். முயற்சி லாபத்தை உண்டாக்கும். உடன் பணிபுரிபவர்கள் ஒத்துழைப்பால் விருப்பம் நிறைவேறும்.திருவாதிரை: குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். வாழ்க்கைத் துணையின் வழியே ஆலோசனை நன்மை தரும்.புனர்பூசம் 1,2,3: முயற்சியில் லாபம் காண்பதற்காக பிறரை அனுசரித்துச் செல்வீர். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். லாபம் அதிகரிக்கும்.

கடகம்

புனர்பூசம் 4: முயற்சி வெற்றியாகும் நாள். துணிச்சலுடன் செயல்பட்டு செயல்களில் லாபம் காண்பீர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.பூசம்: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி புரிவர்.ஆயில்யம்: தொழிலில் பணியாளர் உதவியுடன் லாபம் காண்பீர். நேற்றைய கனவு நிறைவேறும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

சிம்மம்

மகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.பூரம்: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரி செய்வீர். எதிர்பார்த்த வாய்ப்பு தேடி வரும். வருமானம் அதிகரிக்கும்.உத்திரம் 1: உங்கள் அணுகுமுறை லாபத்தை உண்டாக்கும். தொழிலில் வாடிக்கையாளர் அதிகரிப்பர். முயற்சி வெற்றியாகும்.

கன்னி

உத்திரம் 2,3,4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். வருமானம் அதிகரிக்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.அஸ்தம்: மனக் குழப்பம் விலகும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.சித்திரை 1,2: தடைபட்டிருந்த வருவாய் வரும். தொழில் முன்னேற்றம் அடையும். உங்கள் எண்ணம் நிறைவேறும்.

துலாம்

சித்திரை 3,4: திடீர் செலவுகளால் நெருக்கடிக்கு ஆளாகும் நாள். எதிர்பார்த்த வருமானம் இழுபறியாகும். வியாபாரத்தில் விட்டுக்கொடுத்து செல்வது அவசியம்.சுவாதி: உங்கள் செயல்களில் எதிர்பாராத தடை ஏற்படும். எதிர்பாராத செலவுகளை சந்திப்பீர். பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.விசாகம் 1,2,3: வெளி வட்டாரத்தில் நெருக்கடி ஏற்பட்டாலும் வீட்டிற்குள் நிம்மதியும் மகிழ்ச்சியும் இருக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.

விருச்சிகம்

விசாகம் 4: லாபமான நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். எதிர்பார்த்த தகவல் வரும். உங்கள் முயற்சி அனுகூலமாகும்.அனுஷம்: வருமானத்தில் இருந்த தடை விலகும். கடன் கேட்டிருந்த இடத்தில் இருந்து பணம் கிடைக்கும்.கேட்டை: வழக்கமான செயல்களில் லாபம் உண்டாகும். குடும்பத்தில் உண்டான நெருக்கடி நீங்கும். முயற்சி லாபமாகும்.

தனுசு

மூலம்: வியாபாரத்தில் லாபம் காணும் நாள். விற்பனை அதிகரிக்கும். விழிப்புடன் செயல்பட்டு வருமானம் காண்பீர். பூராடம்: எதிர்பார்த்த தகவல் வரும். உங்கள் முயற்சி நிறைவேறும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.உத்திராடம் 1: கடன் கொடுத்த பணம் வசூலாகும். பணியாளர்கள் ஒத்துழைப்பால் விருப்பம் நிறைவேறும். 

மகரம்

உத்திராடம் 2,3,4: லாபமான நாள். நேற்று இழுபறியாக இருந்த வேலை இன்று நிறை வேறும்.தொழிலில் லாபம் அதிகரிக்கும்.திருவோணம்: எதிலும் பலமுறை யோசித்து செயல்படுவீர். மனதில் இருந்த குழப்பம் நீங்கும்.அவிட்டம் 1,2: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். பெரியோர் ஆதரவு உண்டாகும். நிதி நிலை சீராகும். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும். 

கும்பம்

அவிட்டம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். நினைத்ததை நடத்தி முடிப்பதில் எதிர்பாராத தடை ஏற்படும். பணிபுரியும் இடத்தில் நெருக்கடிக்கு ஆளாவீர்.சதயம்: வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். உங்கள் எதிர்பார்ப்பு இன்று ஏமாற்றத்தில் முடியும். பூரட்டாதி 1,2,3: புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது. வாகனப் பயணத்தில் எச்சரிக்கை வேண்டும். வீண் செலவு தோன்றும். 

மீனம்

பூரட்டாதி 4: உங்கள் செயல் லாபமாகும். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். பணியாளர்கள் ஒத்துழைப்பால் எண்ணம் நிறைவேறும்.உத்திரட்டாதி: நண்பர்கள் உதவியுடன் வேலையை நடத்தி முடிப்பீர். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும்.ரேவதி: தடைபட்டிருந்த வேலை நடக்கும். கூட்டுத்தொழில் முன்னேற்றம் அடையும். உங்கள் செயல் லாபமாகும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!