மீன ராசியினருக்கு மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
3 hours ago
மீன ராசியினருக்கு மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: நினைத்ததை நடத்தி, திட்டமிட்டிருந்த வேலைகளை இன்று முடிப்பீர். வருமானத்தில் இருந்த தடை விலகும்.பரணி: உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும்.கார்த்திகை 1: கூட்டுத்தொழிலில் பங்குதாரர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்கள் செயல்களில் நன்மை உண்டாகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: கோயி்ல் வழிபாட்டால் மனம் தெளிவடையும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.ரோகிணி: உடல்நிலை சீராகும். சுறு சுறுப்பாக செயல்பட்டு உங்கள் வேலையில் லாபம் அடைவீர். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.மிருகசீரிடம் 1,2: இழுபறியாக இருந்த வேலை முடியும். வழக்கு சாதகமாகும். செல்வாக்கு உயரும் நாள்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். நினைப்பதை நடத்தி முடிப்பீர். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும்.திருவாதிரை: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த வருவாய் ஏற்படும். நேற்றைய எண்ணம் நிறைவேறும்.புனர்பூசம் 1,2,3: உங்கள் செயல் லாபமாகும். நம்பிக்கையுடன் மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். உறவினரால் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும்.

கடகம்

புனர்பூசம் 4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். முயற்சியில் நீங்கள் எதிர்பார்த்த பலன் தள்ளிப் போகும். நெருக்கடிகளை சந்திப்பீர்.பூசம்: நண்பர்கள் உதவி இன்று நன்மை தரும். கடன் கொடுத்திருந்த பணம் உங்கள் கைக்கு வரும்.ஆயில்யம்: வியாபார போட்டியாளர் விலகுவர். வியாபாரம் முன்னேற்றமடையும். செலவிற்கேற்ற பணம் வரும்.

சிம்மம்

மகம்: முயற்சி வெற்றியாகும் நாள். வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர். வரவு அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.பூரம்: குடும்பத்தினர் உங்களுக்கு உதவியாக இருப்பர். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிடைக்கும்.உத்திரம் 1: தடைகளைத் தாண்டி முயற்சியில் வெற்றி காண்பீர். செயலில் லாபம் உண்டாகும். நீங்கள் நினைத்தது நிறைவேறும்.

கன்னி

உத்திரம் 2,3,4: திட்டமிட்டு செயல்பட்டு லாபம் காண்பீர். கருத்து வேறுபாட்டால் விலகிச் சென்றவர் உங்களைத் தேடி வருவர்.அஸ்தம்: உங்கள் முயற்சி இன்று எளிதாக நிறைவேறும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். மனக்குழப்பம் நீங்கும்.சித்திரை 1,2: வருமானம் அதிகரிக்கும். பழைய கடன்களை அடைப்பீர். பணிபுரியும் இடத்தில் பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது.

துலாம்

சித்திரை 3,4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சி இன்று இழுபறியாகும். மனக்குழப்பம் அதிகரிக்கும்.சுவாதி: உங்கள் செயல்களை திட்டமிட்டு செய்வது நல்லது. குடும்பத்தினர் தேவையை நிறைவேற்றுவீர்.விசாகம் 1,2,3: உழைப்பு அதிகரிக்கும். செய்து வரும் தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். முயற்சி வெற்றியாகும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.

விருச்சிகம்

விசாகம் 4: வெளியூர் பயணத்தில் எச்சரிக்கை அவசியம். உங்கள் விருப்பம் இன்று நிறைவேறாமல் தள்ளிப் போகும்.அனுஷம்: எதிர்பாராத செலவு தோன்றி சங்கடப் படுத்தும். பிறரை நம்பி மேற்கொண்ட வேலை இழுபறியாகும்.கேட்டை: குடும்பத்தில் சிறு குழப்பம் தோன்றி மறையும். வீண் பிரச்னை தேடிவரும். வாகனத்தில் செலவு தோன்றும்.

தனுசு

மூலம்: லாபமான நாள். வியாபார முன்னேற்றம் கருதி நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும். வருவாய் அதிகரிக்கும்.பூராடம்: எதிர்பார்த்த பணம் வரும். நவீன பொருள் வாங்குவீர். நெருக்கடி விலகும். நேற்றைய எண்ணம் நிறைவேறும்.உத்திராடம் 1: எதிர்பார்த்த தகவல் வரும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். போட்டியாளர் விலகிச் செல்வர். எதிர்பார்த்த வருமானம் வரும்.திருவோணம்: முன்னேற்றம் கண்டு சிலர் விமர்சனம் செய்வர். அதைப் பொருட்படுத்த வேண்டாம். அவிட்டம் 1,2: வேலைக்காக மேற்கொண்ட முயற்சி வெற்றியாகும். நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர்கள்.

கும்பம்

அவிட்டம் 3,4: நேற்று வரை இருந்த நெருக்கடி விலகும். சிறு வியாபாரத்திலும் இன்று லாபம் அதிகரிக்கும். உழைப்பாளிகள் நிலை உயரும்.சதயம்: முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த பணம் வரும். உடல்நிலையில் இருந்த சங்கடம் நீங்கும்.பூரட்டாதி 1,2,3: விஐபிகள் ஆதரவால் வேலை நடந்தேறும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. 

மீனம்

பூரட்டாதி 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத நெருக்கடி தோன்றும். பணிபுரியும் இடத்தில் பிரச்னை உண்டாகும். உத்திரட்டாதி: மனதில் இனம் புரியாத குழப்பம் ஏற்படும். உங்களுக்கு ஆதரவாக இருந்தவர்களும் இன்று எதிராவர்.ரேவதி: முயற்சியில் தடையும் தாமதமும் ஏற்படும். வியாபாரத்தில் போட்டியாளரால் நெருக்கடிக்கு ஆளாவீர். புதிய முயற்சி இன்று வேண்டாம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!