உலகில் பழைமையான மொழி தமிழ் என சுவிஸ் மக்கள் சாட்சியம்!
உலகில் பழைமையான மொழி தமிழ் என சுவிஸ் மக்கள் தெரிவித்த கருத்து ஒன்று வெளியாகியுள்ளது.
சுவிற்சர்லாந்தில் உள்ள Coop என்ற வியாபார நிறுவனம் வாராந்தம் வெளியிடும் Coopzeitung என்ற இந்த வார பத்திரிகையில் 95 ஆம் பக்கத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போது அவர்கள் இவ்வாறு கூறியிருக்கின்றார்கள்.
வாராந்தம் இந்த பகுதியில் யாராவது ஒரு கேள்வி கேட்பார்கள் அதற்கு பத்திரிகை ஆசிரியர் பதில் அளிப்பார், அதன்படி இந்த வாரம் உலகத்தில் பழமையான மொழி எது என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது அதற்கு அவர்கள் அளித்த பதிலில்,
உலகில் மிகவும் பழமையான, இன்றும் பேசப்படுகின்ற மொழி என்று முதலாவதாக தமிழைத்தான் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
தமிழ், சீனம், அரபு, பேர்சி மற்றும் அரமேயம் ஆகிய மொழிகளை மிகவும் பழமையான மொழிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக உலகப் படத்தில் தமிழ் பேசும் இடம் என்று நேரடியாக இலங்கையை தான் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.
இந்த பத்திரிகையின் பதிவில் கடைசியாக கேள்விக்கான பதிலாக தமிழ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது: ஏற்கனவே தெரிந்ததுதான் என்றாலும் இங்கே ஐரோப்பாவில் இருந்து ஜேர்மன் மொழியில் வெளி வருகின்ற பத்திரிகையில் மீண்டும் ஒரு தடவை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள் இதையிட்டு தமிழர்களான நாம் பெருமை கொள்ளலாம்.
பத்திரிகையின் 95ம் பக்கம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது