காங்கோவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 78 பேர் பலி
ஆப்பிரிக்க நாடான கிழக்கு காங்கோவின் தெற்கு கிவு மாகாணத்தின் மினோவில் இருந்து வடக்கு கிவு மாகாணத்தின் கோமா பகுதியை இணைக்கும் ஏரியில் படகு ஒன்று சென்று கொண்டிருந்தது.
அந்தப் படகில் 278 பயணிகள் இருந்தனர். ஏரியை ஒட்டி அமைந்துள்ள கிடுகு துறைமுகம் அருகே சென்றபோது அதிக பாரம் தாங்காமல் படகு திடீரென கவிழ்ந்தது.
இதில் பயணித்த பலர் ஏரி நீரில் மூழ்கினர். நீச்சல் தெரிந்தவர்கள் கரையை நோக்கி நீந்தினர். தகவலறிந்த மீட்புக்குழு அங்கு விரைந்து சென்றது. தண்ணீரில் தத்தளித்த 10 பேரை உயிருடன் மீட்கப்பட்டனர்.
விபத்து நடந்த ஏரியில் மீட்புப் பணி தொடர்கிறது. இந்நிலையில், படகு கவிழ்ந்த விபத்தில் 78 பேர் பலியாகினர். பலர் பத்திரமாக மீட்கப்பட்டனர் என உள்ளூர் கவர்னர் தெரிவித்தார்.
படகு விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச்சென்றதே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. மேலும் சிலரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.