முதல் போட்டியிலேயே இந்தியா அணி படுதோல்வி

#India #Women #Newzealand #Cricket #WorldCup
Prasu
1 year ago
முதல் போட்டியிலேயே இந்தியா அணி படுதோல்வி

9-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் சார்ஜாவில் நடந்து வருகிறது. 

இன்று நடந்த முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது.இந்நிலையில், இன்று நடந்த 2வது போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. 

டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி, முதலில் பேட் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 160 ரன்கள் குவித்தது. 

கேப்டன் சோபி டிவைன் அரை சதமடித்து 57 ரன்கள் எடுத்தார்.இந்திய அணி சார்பில் ரேணுகா சிங் 2 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

அந்த அணியின் வீராங்கனைகள் நிலைத்து நின்று ஆடாமல் விரைவில் அவுட் ஆகினர்.இறுதியில், இந்திய அணி 102 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதனால் 58 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.நியூசிலாந்து சார்பில் ரோஸ்மேரி மெய்ர் 4 விக்கெட்டும், லீ டஹுஹு 3 விக்கெட்டும், ஈடன் கார்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4