பாகிஸ்தானில் சட்டவிரோத கொலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பலாத்காரமாக காணாமல் போதல்கள் மற்றும் சட்டவிரோத கொலைகளுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பலுசிஸ்தானின் உரிமைகள் பிரதிநிதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பலுசிஸ்தான் மனித உரிமைகள் பேரவையின் பிரதிநிதி சமி பலோச், பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோரின் உயிர்களைப் பாதுகாக்க ஐக்கிய நாடுகள் சபை தலையிட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பு பலுசிஸ்தான் சமூகத்தின் முக்கிய நபர்களை குறிவைத்து அந்த காணாமல் போன சம்பவங்களை மேற்கொள்கிறது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
2022 ஆம் ஆண்டில் மட்டும், 367 பேர் காணாமல் போயுள்ளனர், மேலும் 79 பேர் சட்டவிரோதமாக கொல்லப்பட்டுள்ளனர், பலுசிஸ் தான் மனித உரிமைகள் பேரவையின் பிரதிநிதி, லாகூரில் உள்ள மருத்துவமனையில் இருந்து காணாமல் போனதாக சந்தேகிக்கப்படும் 38 அடையாளம் தெரியாத சடலங்கள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.