1400 வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது
இலங்கை கடற்படை மற்றும் கொழும்பு பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வு அலுவலகம் இணைந்து கொழும்பு துறைமுக நகரை அண்மித்த பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, விற்பனைக்காக தயார் செய்யப்பட்ட சுமார் 1400 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அதன்படி, மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நிறுவனத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம், கொழும்பு பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வு அலுவலகத்துடன் இணைந்து கொழும்பு துறைமுக நகர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது துறைமுக நகர நுழைவு வாயிலுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் சோதனையிடப்பட்டுள்ளார்.
அங்கு, குறித்த நபரிடம் விற்பனைக்கு தயார்படுத்தப்பட்ட ஆயிரத்து நானூறு (1400) வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இந்த நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மாத்தளை பல்லேயாய பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டதுடன், குறித்த சந்தேக நபருடன் வெளிநாட்டு சிகரெட்டுக்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.